நாகலாபுரம் கோயிலில்: சூரிய பூஜை மகோற்சவம்

நாகலாபுரத்தில் உள்ள வேதநாராயண சுவாமி கோயிலில் சூரிய பூஜை மகோற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகலாபுரம் கோயிலில்: சூரிய பூஜை மகோற்சவம்

நாகலாபுரத்தில் உள்ள வேதநாராயண சுவாமி கோயிலில் சூரிய பூஜை மகோற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள நாகலாபுரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான வேதநாராயண சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 3 நாள்கள் கருவறையில் உள்ள சிலை மீது சூரிய ஒளி படுவது வழக்கம்.
அதன்படி, வியாழக்கிழமை மாலை சூரியகதிர்கள் கோயிலுக்குள் நுழைந்து வேதநாராயண சுவாமியின் திருவடிகளில் விழுந்தது. அப்போது அர்ச்சகர்கள் தீபாராதனை காண்பித்தனர்.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை வேதநாராயண சுவாமியின் நாபியில் (மார்பு பகுதி) விழுந்தது. மூன்றாம் நாளான சனிக்கிழமை அவரது சிரசில் சூரிய ஒளி பட உள்ளது.
இதை சூரியபூஜை மகோற்சவமாக தேவஸ்தானம் கொண்டாடி வருகிறது. இக் காட்சியைக் காண பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் இக்கோயிலுக்கு திரண்டு வந்தனர்.
சூரிய கதிர்களை வரவேற்க ராஜகோபுரத்திலிருந்து அர்த்த மண்டபம் வரை வண்ணக் கோலங்கள் போடப்பட்டன. இதைத் தொடர்ந்து கோயில் அருகில் உள்ள திருக்குளத்தில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 5 நாள்கள் (மார்ச் 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை) தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதில் மார்ச் 27-ஆம் தேதி தெப்போற்சவத்துக்குப் பின், ஸ்ரீதேவி பூதேவி சமேத வேதநாராயண சுவாமி முந்துபந்தல் வாகனத்திலும், 28-ஆம் தேதி பெரிய சேஷ வாகனத்திலும் மாடவீதியில் பவனி வர உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாகலாபுரம் வேதநாராயண சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மாலை ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்த சூரியக் கதிர்கள்.
நாகலாபுரம் வேதநாராயண சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மாலை ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்த சூரியக் கதிர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com