ராமானுஜர் 1000-ஆவது ஆண்டு விழா: சமுதாய நல்லிணக்க பாத யாத்திரை ஏப்.1-இல் தொடக்கம்

வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு,
ராமானுஜர் 1000-ஆவது ஆண்டு விழா: சமுதாய நல்லிணக்க பாத யாத்திரை ஏப்.1-இல் தொடக்கம்

வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, விசுவ ஹிந்து பரிஷத்தின் சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் பாத யாத்திரை நிகழ்ச்சி திருவல்லிக்கேணியில் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சமுதாய நல்லிணக்க பாத யாத்திரை, சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் ஸ்ரீ பரமஹம்சா அப்பன் ராமானுஜர் எம்பார் அருளுரை அளிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அறிஞர்கள், இசை கலைஞர்கள், பேச்சாளர்கள், முக்கிய விளையாட்டு வீரர்கள், திரைத்துறையினர், பல்வேறு துறை சாதனையாளர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இந்த பாத யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலை ஏப்ரல் 2 -ஆம் தேதி மாலை 4 மணிக்கு அடைகிறது. அங்கு, ஜீயர் சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.
இந்தத் தகவல், விசுவ ஹிந்து பரிஷத்தின் சமுதாய நல்லிணக்க பேரவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com