கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் சூரிய பூஜை

திருத்தணி, கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூரிய பூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
சூரிய பூஜை விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத கோட்டா ஆறுமுக சுவாமி.

திருத்தணி முருகன் கோயிலின் துணைக் கோயிலான கோட்டா ஆறுமுக சுவாமி கோயில், திருத்தணி நந்தி ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும், பங்குனி மாதம் மூன்று நாள்கள் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் நாள் விழாவில் சூரிய ஒளிக் கதிர்கள், மூலவர் முருகப்பெருமான் திருப்பாதங்கள் மீது விழுந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இரண்டாம் நாளான திங்கள்கிழமை, திருமேனி மீதும், மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை சிரசின் மீதும் சூரிய ஒளி விழும். அந்த நேரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com