ஆதம்பாக்கம் ஸ்ரீ பழண்டி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ பழண்டி அம்மன்
ஆதம்பாக்கம் ஸ்ரீ பழண்டி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ பழண்டி அம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மே 8-ம் தேதி நடைபெறுகின்றது. இவ்வாலயத்தைப் பற்றிய சிறப்புத் தகவல்கள் :

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் போது திடீரென ஓர் அம்மன் சிலை கிணற்றில் தென்பட்டது. பூமியிலிருந்து தோன்றிய அந்த கருங்கல்லில் ஆன அந்த விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கிராம தேவதையாக வழிபடப்பட்டது. பழமையான விக்ரகம் என்பதால் ‘பழமையான அம்மன்’ என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி பழண்டி அம்மன் என தற்போது அழைக்கப்படுகின்றது. ஆலயத்தில் நுழைந்ததும் பெரிய திரிசூலமும், பலிபீடமும் உள்ளன. அம்மனின் இருபுறமும் பாலவிநாயகரும், பாலமுருகனும் கோயில் கொண்டுள்ளனர். பிராகரத்தில் தேவியின் பின்புறம் புற்று உள்ளது. பல்வேறு தெய்வங்களின் சுதைச் சிற்பங்களும், ஓவியங்களும் ஆலயத்திற்கு மெருகூட்டுகின்றன.

இந்த அம்மனை குலதெய்வமாகக் கொண்டிருப்பவர் அநேகம் பேர். இத்தலத்திலுள்ள அரசும், வேம்பும் இணைந்த மரத்தில் தொட்டில் கட்டி பழண்டியம்மனை பிரார்த்தனை செய்தால், மழலைச் செல்வம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வெப்ப நோய்களிலிருந்து நிவாரணம் பெற அம்மனை வேண்டி வருபவர் பலர். அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் இறுதி வரை தினமும் அன்னைக்கு குளிர்ந்த நீரில் அபிஷேகம் செய்வதோடு, அக்னி நட்சத்திரம் முடியும் நாளில் அன்னையின் கருவறையில் தெப்பம் போல் முழுவதும் தண்ணீர்விட்டு தாமரை மலர்களால் நிரப்பி, தேவியைக் குளிரச் செய்கின்றனர். ஆண்டு முழுவதும் விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும் இந்த அன்னையை ‘பேசும் தெய்வம் ஆகிய பாசம் உள்ள தேவி’ என்று பக்தர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

பல்வேறு திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் இவ்வாலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மே 8-ம் தேதி காலை 6 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும், இரவு அம்மன் திருவீதி உலா வருதலும் நடைபெறும். கும்பாபிஷேக நிகழ்வுகளை ஐயப்பதாஸர் சீதாராம குருக்கள் முன்னிலையில் சர்வசாதகம் திருகழுக்குன்றம் ராமசந்திர அர்ச்சகர் நிகழ்த்துகின்றனர். 

கும்பாபிஷேக வர்ணனைகளை கலைமாமணி நாகை முகுந்தன் அளிக்கின்றார். யாக சாலை, பூர்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றது. பரம்பரை அறங்காவலர் குழுவினரால் ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், கடுமையான வெப்பத்தினால் சூழப்பட்ட இந்த காலகட்டத்தில், அவசியம் இந்த அம்மனை சென்று தரிசிக்க வேண்டும். 

மேலும் தகவல்களுக்கு 044-22440496, 9444050496

தகவல்கள் - கே.ஆர்.சுப்ரமண்யம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com