அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர் கண்டிகையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூன்றாம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர் கண்டிகையில், நடைபெற்ற விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர் கண்டிகையில், நடைபெற்ற விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர் கண்டிகையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூன்றாம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, கடந்த 5-ஆம் தேதி விநாயகர் பூஜை, கொடியேற்றம், அம்மனுக்கு காப்புக் கட்டுதல், யாகசாலை பூஜை, ராஜராஜேஸ்வரி அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.
6-ஆம் தேதி யாக சாலை பூஜையும், 7-ஆம் தேதி கம்பநதி அம்மன் ஊர்வலமும் நடைபெற்றது. 8-ஆம் தேதி காமாட்சி அம்மன் ஊர்வலம், 9-ஆம் தேதி லட்சுமி ஊர்வலமும், 10-ஆம் தேதி மீனாட்சி அம்மன் ஊர்வலமும் நடைபெற்றது.
11-ஆம் தேதி வைஷ்ணவி அம்மன் ஊர்வலமும், 12-ஆம் தேதி துர்கை அம்மன் ஊர்வலமும், 13-ஆம் தேதி மயான கொள்ளை, மகிஷாசுரமர்த்தினி அம்மன் ஊர்வலமும் நடைபெற்றது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தீமித் திருவிழா நடைபெற்றது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர் தீ மிதித்தனர். இதைத்தொடர்ந்து வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி இ.குமார் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.
திரௌபதி அம்மன் கோயிலில்...
திருத்தணி அருகே திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விளக்காணம்பூடி புதூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், விழாவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காப்பு கட்டிய பக்தர்கள் மாலை 6 மணிக்கு பூங்கரகத்துடன் அக்னி குண்டத்தை வந்தடைந்தனர். பின்னர், வாண வேடிக்கை முழங்க 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com