திருமலையில் திருமணம் செய்ய இணையதள முன்பதிவு வசதி அறிமுகம்

திருமலையில் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் இனி இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளும் வசதியை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது.
திருமலையில் திருமணம் செய்ய இணையதள முன்பதிவு வசதி அறிமுகம்

திருமலையில் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் இனி இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளும் வசதியை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது.
திருமலையில் திருமணம் செய்து கொள்ள விரும்புவர்கள் பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு நேரில் வந்து, தங்களது பெயர்களை பதிவு செய்து வந்தனர். இதனால், கால விரயமும், பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், திருமணத்துக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் புதிய வசதியை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் மணமக்கள் இலவசமாக திருமணம் செய்து கொண்டு, தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ள முடியும். திருமலையில் திருமணம் செய்துகொள்ள விரும்புட்வர்கள் தேவஸ்தானத்தின் ttd.sevaonline.com என்ற இணையதளத்தில், 'திருமண முன்பதிவு' பக்கத்தில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதில், கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்த பின்னர், ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இதனை நகல் எடுத்துக் கொண்டு தம்பதியர் அதில் குறிப்பிட்டுள்ள நேரப்படி, திருமலையில் உள்ள கல்யாண மண்டபத்தை அணுக வேண்டும்.
பின்னர், தேவஸ்தான ஊழியர்கள் தங்கும் அறை, புரோகிதர், திருமணத்துக்கு தேவையான மஞ்சள், குங்குமம், கங்கணம் உள்ளிட்டவற்றை இலவசமாக ஏற்பாடு செய்வர்.
திருமணம் முடிந்த பின்னர், மணமக்கள் அவர்களது பெற்றோர் உள்பட 6 பேருக்கு ரூ.300 விரைவு தரிசனம் டிக்கெட், 10 சிறிய லட்டுகள் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும்.
ஆனால், திருமணத்துக்கு மணமக்களின் பெற்றோர்கள் கண்டிப்பாக வரவேண்டும். அவ்வாறு வரமுடியாத நிலையில் அதற்குரிய சான்றிதழ்களை மணமக்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com