மூடி வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள்.
மூடி வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள்.

கிணறு தூர்வாரியபோது கிடைத்த4 சாமி சிலைகள்

அம்பத்தூர் அருகே குடிநீர் வாரிய கிணற்றை தூர் வாரியபோது செவ்வாய்க்கிழமை 4 சாமி சிலைகள் கிடைத்தன. அவை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அம்பத்தூர் அருகே குடிநீர் வாரிய கிணற்றை தூர் வாரியபோது செவ்வாய்க்கிழமை 4 சாமி சிலைகள் கிடைத்தன. அவை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை கொரட்டூர் அருகே உள்ள தாதங்குப்பம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான ஆழ்கிணற்றை தூர்வாரும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது பகல் 11 மணியளவில் கிணற்றின் அடிப்பகுதியில் 4 சாமி சிலைகள் தென்பட்டன.
அவற்றை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதனை ஆய்வு செய்தபோது சுமார் ஒன்றரை அடி உயர சனிபகவான், பைரவர், இரு நாயன்மார்களின் சிலைகள் என்பது தெரிய வந்தது.
தகவலறிந்து அங்கு வந்த வில்லிவாக்கம் உதவி ஆணையர் ஜெயசிங், ராஜமங்கலம் காவல் ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் 4 சாமி சிலைகளையும் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் அவற்றை முறைப்படி அம்பத்தூர் வட்டாட்சியர் கலையரசியிடம் ஒப்படைத்தனர். இந்த சாமி சிலைகள் அரசின் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.
சாமி சிலைகளை புகைப்படம் எடுக்க விடாமல் வருவாய்த்துறையினர் கெடுபிடியில் ஈடுபட்டனர். அந்தச் சிலைகள் துணியால் மூடி கட்டப்பட்டிருந்தன. கருவூலத்துக்கு சென்று புகைப்படம் எடுத்து கொள்ளும்படி வட்டாட்சியர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com