29-இல் விளாப்பாக்கம் பச்சையம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

ஆற்காடு வட்டம், விளாப்பாக்கம் பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை (மே 29) காலை 9 மணிக்கு மேல் 10.30க்குள் நடைபெறுகிறது.

ஆற்காடு வட்டம், விளாப்பாக்கம் பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை (மே 29) காலை 9 மணிக்கு மேல் 10.30க்குள் நடைபெறுகிறது. வி.என்.சபாரத்தின சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்.
இதையொட்டி 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அம்மன் கரிக்கோலம் வருதல், 27ஆம் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜையுடன் மகா பூர்ணாஹுதியும், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.
28-ஆம் தேதி காலை 8 மணிக்கு 2-ஆம் கால யாகசாலை பூஜையும், அன்று மாலை 3 மணிக்கு அம்மன் பிரதிஷ்டையும், மாலை 5 மணிக்கு 3-ஆம் கால யாகபூஜையுடன் அஷ்டபந்தனம் சாத்துதலும் நடைபெறும்.
29-ஆம் தேதி காலை 7 மணிக்கு 4-ஆம் கால யாகபூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதியுடன் தீபாராதனையும், 9 மணிக்கு மேல் பச்சையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் பச்சையம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விளாப்பாக்கம் செங்குந்தர் சமுதாயத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com