விஜயராகவ பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள விஜயராகவ பெருமாள் கோயிலின் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாக பூஜை.
கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாக பூஜை.

திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள விஜயராகவ பெருமாள் கோயிலின் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான விஜயராகவ பெருமாள், விஜயலட்சுமி தாயார் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, 3 யாக சாலைகள், 108 கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை பகவத் பிரார்த்தனை சங்கல்பம், புண்யாவாசனம், வாஸ்து ஆச்சார்யர்த் விக்ஷனம், அங்குரார்ப்பணம், சர்வ யாககுண்டங்களில் ஹோமம் ஆரம்பம், கலாகர்ஷனம், கும்ப திருவாராதனம், பூர்ணாஹுதி, தீர்த்த பிரசாத விநியோகம் உள்ளிட்டவை நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 மணி வரை அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல், மகா சாந்தி பூர்ணாஹுதி, உக்த ஹோமம் நடைபெறுகிறது.
திங்கள்கிழமை அதிகாலை, 4.30 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூபம், கும்ப திருவாராதனமும், காலை 6.30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமும், 7.30 மணிக்கு மகா குட
முழுக்கு விழாவும் நடைபெறுகிறது. பின்னர், 9.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு உற்சவர் திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com