திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்கப் பணிகளுக்கு தடை நீக்கம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை பசுமைத் தீப்பாயம் நீக்கியுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை பசுமைத் தீப்பாயம் நீக்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதை விரிவாக்கத்தின்போது, மரங்கள் வெட்டப்படுவதாக, செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழக்குப் பதிவு செய்து, பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது.
விரிவாக்கப்பணி மற்றும் மரங்கள் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் விரிவாக்கப் பாதையை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை வனப் பாதுகாவலர் சேகர் இடம் பெற்ற குழுவை, தீர்ப்பாயம் அமைத்தது. அந்த குழுவின், முதற்கட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், சில இடங்களில் பணிகள் தொடர, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய அமர்வு முன், திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கிரிவலப்பாதையில், மரங்கள் வெட்ட தடை விதிக்கப்படுகிறது. விரிவாக்கப்பணிகளுக்கு, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. மேலும், விரிவாக்கப்பணிகளின்போது, தீர்த்தங்கள், பாதங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் பாதிக்கக் கூடாது.
கிரிவலப் பாதையில், மலைக்கு எதிர்ப்புறத்தில் அவசர வாகனங்கள் செல்வதற்கான பாதை அமைப்பது, குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதி செய்வது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் விரிவாக்கப்பணி தொடர அனுமதியளிக்கப்படுகிறது. பெளர்ணமி நாளில், கிரிவலம் செல்வோருக்கு தேவையான அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com