வி.ஐ.பி. களுக்கு அளிக்கப்படும் பூரண கும்ப மரியாதையை ரத்து செய்ய முடிவு

ஆந்திர மாநில கோயில்களுக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு கோயில் சார்பில் அளிக்கப்படும் பூரண கும்ப மரியாதையை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநில கோயில்களுக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு கோயில் சார்பில் அளிக்கப்படும் பூரண கும்ப மரியாதையை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு திருமலை உள்பட அதிக அளவில் நன்கொடை அளித்த ஜமீன்தாரர்கள், செல்வந்தர்கள், மன்னர்கள் உள்ளிட்டோருக்கும் நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர், பிரதமர், ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோருக்கும், வி.வி.ஐ.பி.களுக்கும் கோயிலுக்கு செல்லும் முன் கோயில் நிர்வாகம் பூரண கும்ப மரியாதை அளித்து வருகிறது. 
தற்போது ஜமீன்தார்கள், மன்னர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்ட வர்க பாரம்பரியம் மறைந்து விட்ட நிலையில் நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர், பிரதமர், ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் தவிர்த்து மற்ற வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பிகளுக்கு அளிக்கப்படும் பூரணகும்ப மரியாதையை ரத்து செய்ய ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com