நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி, சுவாமி -அம்பாள் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம். (இடது) பங்கேற்ற பக்தர்கள்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம். (இடது) பங்கேற்ற பக்தர்கள்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி, சுவாமி -அம்பாள் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான விழா கடந்த 3 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் ரதவீதிகளில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (நவ.12) காந்திமதியம்மன் சன்னதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு, கீழரத வீதி, தெற்கு ரத வீதி, பேட்டை சாலை வழியாக அருள்மிகு கம்பாநதி காமாட்சி அம்மன் கோயிலை அடைந்தார். 
அங்கு திங்கள்கிழமை நண்பகலில் சுவாமியின் தபசுக்காட்சி நடைபெற்றது. 
தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக ஆயிரங்கால் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி -அம்பாள் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். திருக்கல்யாணத்திற்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து, வரும் 16 -ஆம் தேதி வரை ஊஞ்சல் விழாவும், 17 -ஆம் தேதி இரவு சுவாமி -அம்மன் ரிஷப வாகனத்தில் பட்டணப்பிரவேச வீதியுலாவும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com