நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் 18 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
 கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சிகைக்காய், மஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 பகல் ஒரு மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com