திருச்சானூர் பிரம்மோற்சவம் 6-ஆம் நாள்: சர்வ பூபாலம், தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி

திருச்சானூர் பிரம்மோற்சவம் 6-ஆம் நாள்: சர்வ பூபாலம், தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6}ஆம் நாளான திங்கள்கிழமை காலை சர்வபூபால வாகனத்தில் காளிங்கநர்த்தன கிருஷ்ணன் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து அருள்பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6}ஆம் நாளான திங்கள்கிழமை காலை சர்வபூபால வாகனத்தில் காளிங்கநர்த்தன கிருஷ்ணன் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து அருள்பாலித்தார்.
 இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.
 இதையடுத்து காலை 11.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஸ்ரீகிருஷ்ண மண்டபத்தில் தாயாருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், குங்குமம், சந்தனம், பழரசம் போன்ற பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
 திருமஞ்சனத்தின் போது பல்வேறு மலர்கள் மற்றும் உலர் பழங்கள், மஞ்சள், அலங்கார கற்கள் ஆகியவற்றால் ஆன மாலைகள், கீரிடம் தாயாருக்கு அணிவிக்கப்பட்டது.
 தங்க ரதத்தில் பவனி
 மாலை 4 மணிக்கு சர்வ அலங்கார பூஷிதையாக தாயார் தங்கரதத்தில் மாடவீதியில் வலம் வந்தார். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்க ரதத்தை பெண்கள் ஒன்று கூடி வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு தாயாருக்கு சகஸ்ர தீபாலங்கார மண்டபத்தில் 1008 விளக்குகளுக்கு மத்தியில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
 கருட வாகன சேவை
 இரவு 8 மணி முதல் 10 மணி வரை கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் மாடவீதியில் வலம் வந்தார்.
 தாயாரின் யானை வாகனத்தில் ஏழுமலையான் வலம் வருவது போன்று, ஏழுமலையானின் வாகனமான கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தின் போது பவனி வருவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை இரவு தாயார் ஏழுமலையானின் திருப்பாதங்களை அணிந்து கொண்டு கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
 இந்த வாகன சேவைகளின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். வாகன சேவையின் முன் நாலாயிர திவ்யபிரபந்த பாராயணமும், வாகன சேவைக்கு பின்னால் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com