கோயில்களில் நவராத்திரி நிறைவு விழா

நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு காளிகாம்பாள் வீதி உலா நடைபெற்றது.
நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காளிகாம்பாள் வீதி உலா.
நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காளிகாம்பாள் வீதி உலா.

நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு காளிகாம்பாள் வீதி உலா நடைபெற்றது.
திருவள்ளூரில் பிரசித்திப் பெற்ற கபாலீஸ்வரர் சமேத காளிகாம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 9 நாள்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு காளிகாம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ராமலிங்க ஆச்சாரி, ஆறுமுகம் ஆச்சாரி, பாலாஜி, முனிவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அகத்தீஸ்வரர் கோயில்...
மாதவரம் - வில்லிவாக்கம் சாலையில் உள்ள சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 21-ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சொர்ணாம்பிகை, காமாட்சி, அன்னபூரணி, மீனாட்சி, சரஸ்வதி உள்ளிட்ட 9 அம்மன்கள் அலங்கரிக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. இதில், சொர்ணாம்பிகை அம்பாள் முக்கிய வீதிகளில் உலா வந்தார்.
மேலும், கோயிலில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டிருந்தது. இதில், வெளிநாடு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆயிரம் பொம்மைகள் இடம்பெற்றன.
விழாவின் 9 நாள்களும் சிறப்பு பூஜைகள், ஆராதனை, அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், மாதவரம், கொளத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். 
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோ.ஜெயப்பிரகாஷ் நாராயணன், தக்கார் குமரேசன், மேலாளர் குகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com