காவிரி மகாபுஷ்கரம்: ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி

மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கர விழாவின் 3-வது நாளான வியாழக்கிழமை ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
காவிரி மகா புஷ்கரம் விழாவின் 3-வது நாளான வியாழக்கிழமை காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மலர் மாலையை அணிவிக்கும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். (இடது) காவிரி புஷ்கரம் விழாவை முன்னிட்டு, து
காவிரி மகா புஷ்கரம் விழாவின் 3-வது நாளான வியாழக்கிழமை காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மலர் மாலையை அணிவிக்கும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். (இடது) காவிரி புஷ்கரம் விழாவை முன்னிட்டு, து

மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கர விழாவின் 3-வது நாளான வியாழக்கிழமை ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா செப்-12 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவின் 3-வது நாளான வியாழக்கிழமை அதிகாலை முதல் துலாக்கட்ட காவிரிக்கு திரளான பக்தர்கள் வருகை தந்து காவிரியில் அமைக்கப்பட்டுள்ள புஷ்கரணியில் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டனர்.
சிறப்பு யாகம்: காலை 9 மணிக்கு துலாக்கட்ட காவிரியின் வடகரையில் திருமணத் தடை நீங்கும் ஸ்ரீ துர்கா ஸ்வரூப, ஸ்ரீ சுயம்வர கலாபார்வதி ஹோமங்கள் மற்றும் ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும், யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கடத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, புஷ்கர தீர்த்தத்தில் கலக்கப்பட்டன.
தொடர்ந்து, மாலை 5 மணிக்கு துலாக்கட்ட காவிரியின் தென் பகுதியில் மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம் பாடசாலை முதல்வர் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில், வேத பாடசாலை மாணவர்களின் சதுர்வேத பாராயணம் மற்றும் காவிரிஅம்மன் வழிபாடு, மகா ஆரத்தி வழிபாடுகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டதுடன், காவிரியில் திரண்டிருந்த திரளான பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி: துலாக்கட்ட காவிரியின் வடபக்கத்தில் பிரத்தியேக மேடை அமைக்கப்பட்டு,அதில் காஞ்சி மகா பெரியவரின் தத்ரூப உருவச்சிலை எழுந்தருளச் செய்யப்பட்டது.
பின்னர் ஸ்ரீ காஞ்சி ஜயேந்திரர் மேடையில் எழுந்தருளினார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் 108 பொற்காசுகள் வழிபாடுகளும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலியை செய்து குரு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து காவிரிக்கு மலர் தூவி, மகா ஆரத்தி வழிபாடுகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், காவிரி புஷ்கர விழாக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சென்னை எஸ். மகாலெட்சுமி, அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் செயலாளர் சுவாமி ராமானந்தா, சிதம்பரம் தீட்சிதர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com