குலசேகரன்பட்டினம் தசரா: நாளை கொடியேற்றம் - செப்.30இல் மகிஷாசுரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா பெருந்திருவிழா வியாழக்கிழமை (செப். 21) காலையில் கொடியேற்றத்துடன்
முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர்.
முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா பெருந்திருவிழா வியாழக்கிழமை (செப். 21) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தியாவிலேயே கர்நாடக மாநிலம், மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. 
பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் இத்திருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும்.
நிகழாண்டில் இத்திருவிழா வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக, புதன்கிழமை பகல் 11 மணிக்கு காளி பூஜை, மாலையில் மங்கள நாகசுர இசை, இரவில் மகுடம், கரகாட்டம், வில்லிசை ஆகியவை நடைபெறுகிறது.
வியாழக்கிழமை காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, 6 மணிக்கு அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அன்னதானம், நாகசுர இசை, திருமுறை இன்னிசை, சமயச் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
செப்.21 ஆம் தேதி முதல் செப்.29 ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். விழா நாள்களில் தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
காப்பு அணியும் பக்தர்கள் சிங்கம், காவலர், தெய்வ வேடங்கள், பெண், மிருகங்கள், மருத்துவர், பிச்சைக்காரர் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.
விழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுரசம்ஹாரம் செப். 30 ஆம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக, அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும். இரவு 12 மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மகிசாசுரனை சம்ஹாரம் செய்கிறார். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
தொட ர்ந்து அக்.1 ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு கடற்கரை மேடையிலும், 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாகவும், 3 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோயில் அபிஷேக மேடையிலும் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், சாந்தாபிஷேக ஆராதû னகள் நடைபெறும். காலை 5 மணிக்கு கோயில் கலைய ரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு அம் மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுவார்.
மாலை 5.30 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடத்தை களைவார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். அக்.2 ஆம் தேதி காலை 6, 8, 10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தக்காரும், உதவி ஆணையருமான தி.சு.ரோஜாலி சுமதா, இணை ஆணையர் தி.பரஞ்ஜோதி, கோயில் செயல் அலுவலர் இரா.ராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com