குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: செப்.30இல் மகிஷாசுரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா பெருந்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்து டன் தொடங்கியது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு நடைபெற்ற சோடச தீபாராதனை.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு நடைபெற்ற சோடச தீபாராதனை.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா பெருந்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்து டன் தொடங்கியது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு சிற ப்பாக நடைபெறும். நிகழாண்டில் இத்திருவிழா வியாழக்கிழமை (செப். 21) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 5 மணி க்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் முக்கிய வீதிகள் வழியே கொண்டுவரப்பட்டது. 6 ம ணிக்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கொடிப்பட்டம் காலை 9 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடியேற்றம் நடைபெற்றது. திரண்டிருந்த பக்தர்கள் 'தாயே முத்தாரம்மா' என விண்ணதிர கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம், பஞ்சமுக,சோடச தீபாராதனைகள் நடைபெற்றது.
முன்னதாக, கோயில் அன்னதானக் கூடத்திலும், கடற்கரை செல்லும் வழியிலும் சிவலூர், சந்தையடியூர் தசரா குழுக்கள் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து பக்தர்கள் கோயிலில் காப்பு அணிந்தனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோயில் கலையரங்கில் சமயச் சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, 8 மணிக்கு பரத நாட்டியம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்தார்.
கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்திருந்தனர். திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கண்ணன், சிவந்தி கல்விக் குழுமத் தலைவர் மு.முருகேசன், உடன்குடி ஒன்றிய அதிமுக செயலர் அம்மன் நாராயணன், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சுந்தரவேல், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் ரவி கிருஷ்ணன், கோயில் முன் மகா மண்டப உபயதாரர் ராமசாமி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் ராஜதுரை, பாஜக மாவட்ட இளைஞரணிச் செயலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (செப். 22) காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுரசம்ஹாரம் செப். 30ஆம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெறும். முன்னதாக, சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளும் அம்மன், மகிஷாசுரனை சம்ஹாரம் செய்கிறார். தொடர்ந்து கடற்கரை மேடை, சித ம்பரேஸ்வரர் கோயில் முன்புறம், அபிஷேக மேடை, கோயில் கலையரங்கம் ஆகியவற்றில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அக்.1 ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுவார். மாலை 5,30 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் பக்தர்க ள் காப்பு அவிழ்த்து வேடம் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். மேலும், தாங்கள் வேடம் அணிந்து வசூலித்த காணிக்கைகளையும் கோயில் உண்டியலில் செலுத்துவார்கள்.
விழா ஏற்பாடுகளை திருநெல்வேலி அறநிலையத் துறை இணை ஆணையர் தி.பரஞ்ஜோதி, கோயில் தக்காரும் உதவி ஆணையருமான தி.சு.ரோஜாலி சுமதா, கோயில் செயல் அலுவலர் இரா.ராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com