காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார் தொடக்கம்

காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் செப். 30 -ஆம் தேதி வரையிலான நவராத்திரி கொலு தர்பார் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.
சிவன், அம்பிகைக்கு சிறப்பு ஆராதனை செய்கிறார் திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள்.
சிவன், அம்பிகைக்கு சிறப்பு ஆராதனை செய்கிறார் திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள்.

காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் செப். 30 -ஆம் தேதி வரையிலான நவராத்திரி கொலு தர்பார் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பாரை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றன.
நிகழாண்டுக்கான நிகழ்ச்சியை திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சிவன், அம்பிகை முன்பாக பல்வேறு சித்ரான்னங்கள், பலகார வகைகள் வைக்கப்பட்டிருந்தன. குருமகா சந்நிதானம் சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபாட்டை தொடங்கிவைத்தார். அப்போது அவர் தனது ஆசி உரையில், மக்கள் இறை வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். இறைவனுக்காக நிறைய செய்ய வேண்டும். பயபக்தியுடன், நேர்த்தியுடன் பிரார்த்தனை செய்யும்போது, மக்களுக்கு எல்லாம் கைகூடும் என்றார்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வி. சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் ஜி. இளஞ்செழியன், ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொலு தர்பாரில் தனியாக ஸ்ரீ தியாகராஜ சுவாமியும், சிவபெருமான் கைலாயத்தில் காட்சியளிப்பது உள்ளிட்ட ஏராளமான கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. செப். 30-ஆம் தேதி வரை பக்தர்களின் பார்வைக்காக கொலு தர்பார் வைக்கப்பட்டிருக்கும். தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை காணலாம். ஒவ்வொரு நாளும் திருவாசகம் முற்றோதல், திருமுறை இன்னிசை, சொற்பொழிவு, பக்திப் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொலு தர்பார் அமைப்பு மற்றும் நவராத்திரி தினசரி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகளான அ. பாலசுப்பிரமணியன், தெ. மரகதவேல், வா. ரவிச்சந்திரன், கோ. இளங்கோவன், ரெ. அறிவுடைநம்பி, த. பாலசுந்தரம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com