திருவள்ளூரில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், கருட வாகன சேவையின்போது பயன்படுத்தப்படும், 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலம்
திருவள்ளூருக்கு வந்த திருப்பதி திருக்குடைக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்ட பக்தர்கள். (வலது) திருப்பதி திருக்குடை வருகையை ஒட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருப்பாச்சூர் வெங்கடேச பெருமாள்
திருவள்ளூருக்கு வந்த திருப்பதி திருக்குடைக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்ட பக்தர்கள். (வலது) திருப்பதி திருக்குடை வருகையை ஒட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருப்பாச்சூர் வெங்கடேச பெருமாள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், கருட வாகன சேவையின்போது பயன்படுத்தப்படும், 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலம் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்தது.
சென்னையில் உள்ள இந்து தர்மார்த்த அறக்கட்டளை சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ காலத்தில் 11 அழகிய வெண்பட்டுக் குடைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது. 
அதன்படி, கடந்த 21-ஆம் தேதி சென்னை பாரிமுனையில் இருந்து வெண்பட்டுக் குடைகள் ஊர்வலம் திருப்பதியை நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில், இந்த திருக்குடைகள் திங்கள்கிழமை திருவள்ளூரை வந்தடைந்தன. பெரியகுப்பம், திருவள்ளூர், ஜெயாநகர், எடப்பாளையம், தலக்காஞ்சேரி என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் திருப்பதி திருக்குடைகளை வழிபட்டனர்.
இதையடுத்து, திருவள்ளூர் வீரராகவர் கோயிலுக்கு வந்த திருக்குடை ஊர்வல குழுவினருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்து, மரியாதை செய்தனர். இதையடுத்து பக்தர்கள் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளையின் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயிலிலிருந்து வரும் மாலை மற்றும் திருப்பதி திருக்குடை ஆகிய இரண்டும் தான் இந்த பிரம்மோற்சவத்தின் சிறப்பு ஆகும். 
கடந்த 21-ஆம் தேதி சென்னையில் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம், திருவள்ளூரைத் தொடர்ந்து திருப்பாச்சூர், கனகம்மாசத்திரம் வழியாக திருச்சானூர் சென்றடைந்தது.
பத்மாவதி தாயார் சந்நிதியில் 2 வெண்பட்டுக் குடைகள் ஒப்படைக்கப்பட்டன. அதோடு மழை வேண்டியும், பக்தர்களின் வேண்டுதல்களும் இந்த திருக்குடையுடன் ஒப்படைக்கப்பட்டன. இதபோல், மீதமுள்ள 9 திருக்குடைகள் திருப்பதி தேவஸ்தானத்திடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com