தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் வரும் 29-ல் எதிர்ச்சேவை

உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை பெருவிழாவில் அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் மதுரைக்கு வருவதையொட்டி மண்டகப் படிகளில்
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் வரும் 29-ல் எதிர்ச்சேவை


உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை பெருவிழாவில் அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் மதுரைக்கு வருவதையொட்டி மண்டகப் படிகளில் பந்தலுக்கான கொட்டகை போடும் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் நடைபெற்றது. 

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாளின் சித்திரைத் திருவிழா நடைபெற இருக்கிறது. 

இந்த மண்டகப்படிகளில் பந்தல் போடுவதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று தொடங்கியது. வேத மந்திரங்கள் ஓதக் கொட்டகை போடுவதற்கான முகூர்ததகால் நடப்பட்டது. 

வரும் 29-ம் தேதி எதிர்ச்சேவையும், 30-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com