மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா தொடக்கம் 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நாளை காலை கொடியேற்றப்படுகின்றது. 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா தொடக்கம் 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நாளை காலை கொடியேற்றப்படுகின்றது. 

ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா நாளை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. 

பின்னர் அங்கு எழுந்தருளும் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலை மாலை என இருவேளையும் மீனாட்சியும் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com