திருவாரூரில் மும்மூர்த்திகள் ஜயந்தி விழா: இன்று தொடக்கம்

திருவாரூரில் மும்மூர்த்திகள் ஜயந்தி இசை விழா புதன்கிழமை (ஏப்.18) தொடங்குகிறது.

திருவாரூரில் மும்மூர்த்திகள் ஜயந்தி இசை விழா புதன்கிழமை (ஏப்.18) தொடங்குகிறது.
கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படுவோர் சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர் ஆவர். இவர்களின் ஜயந்தி விழாவை திருவாரூரில் ஆண்டுதோறும் காஞ்சி காமகோடி பீடம் நடத்தி வருகிறது. நிகழாண்டு விழா புதன்கிழமை தொடங்குகிறது.
சியாமா சாஸ்திரிகள் இல்லத்தில் புதன்கிழமை காலை மங்கள இசை இசைக்கப்படுகிறது.
இதையடுத்து, விசேஷ பூஜைகள், விதை தானம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. மாலையில் இசை விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 
இதில் உண்ணிகிருஷ்ணன் -பாட்டு, மாண்டலின் ராஜேஷ்-மாண்டலின், தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜன் -சிறப்புத் தவில், பரூர் எம்.எஸ். அனந்தகிருஷ்ணன்-வயலின், வைக்கம் கோபாலகிருஷ்ணன் -கடம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதேபோல், திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் கமலாம்பாள் சன்னிதி எதிரே அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மும்மூர்த்திகள் இசை அரங்கில் தினமும் மாலையில் இசைக்கச்சேரி நடைபெறும். இதில் பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா சமிதி அமைப்பினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com