தெலங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து கோயிலுக்குள் சென்ற அர்ச்சகர் 

தெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரை கோயில் அர்ச்சகர் தன் தோளில் சுமந்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். 
தெலங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து கோயிலுக்குள் சென்ற அர்ச்சகர் 

ஹைதராபாத்: தெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரை கோயில் அர்ச்சகர் தன் தோளில் சுமந்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். 

தலித்துகள் பற்றிய சமீபத்தில் நடைபெற்று வன்முறையின் பின்னணியில் பாகுபாடு காண்பிப்பதற்காகவும், கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டு சடங்குகளை மாற்றியமைக்கவும் அவர் இவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் உள்ள ஸ்ரீ ரங்கநாத கோயிலில் சி.எஸ் ரங்கராஜன்(60) கோயில் அர்ச்சகராக உள்ளார். இவர், தெலுங்கு, தமிழ்மொழிகளில் பல கோயில்களில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துபவர். 

இவர், தலித் பக்தரை தன் தோளில் சுமந்து கோயிலுக்குள் செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தலித் இளைஞர் ஆதித்யா பாராஸ்ரீயை தனது தோளில் அமர வைத்து ரங்கராஜன் மாலை மரியாதையுடன் ஊர்வலமாகக் கோயில் கருவறைக்குள் அவரை தூக்கிச் சென்றார். 

இதுகுறித்து தலித் பக்தரிடம் கேட்டபோது...

என் சொந்த ஊரான மெஹபூப்நகரில் உள்ள அனுமன் கோயிலுக்குள் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நடைமுறை பல கோயிலில் பின்பற்றிவருகின்றனர். இது ஒரு நல்ல மாற்றத்திற்கான தொடக்கம் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com