திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருத்தணி திரெளபதியம்மன் கோயில் தீமிதித் திருவிழா, வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மன்.

திருத்தணி திரெளபதியம்மன் கோயில் தீமிதித் திருவிழா, வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவில் உள்ளது புராதன திரெளபதியம்மன் கோயிலில், நடப்பாண்டுக்கான தீமிதி திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. காலை 8 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் அம்மன் பழைய தர்மராஜா கோயில் தெரு, மேட்டுத் தெரு, சந்நிதி தெரு, அரக்கோணம் சாலை, ஜோதி சுவாமி கோயில் தெரு, சந்து தெரு, பழைய பஜார் தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட நகர முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தினமும் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெறுகிறது.
அதேபோல் வரும் 25-ஆம் தேதி திரெளபதியம்மன் திருக்கல்யாணம், 27 -ஆம் தேதி சுபத்திரை திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை மற்றும் புஷ்ப பல்லக்கு நடைபெறுகிறது. மே 6-ஆம் தேதி துரியோதனன் படுகளமும், மாலை 6 மணிக்கு தீ மிதித் திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
செங்குன்றம் வீரமாகாளி அம்மன் கோயிலில்...
 செங்குன்றம் வீரமாகாளி அம்மன் கோயிலில் 40-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
செங்குன்றம் தேவி பராசக்தி வீரமாகாளி அம்மன் கோயில் 40-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம், வியாழக்கிழமை (ஏப்ரல் 19) கொடியேற்றுதல் , காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மங்கள சண்டி ஹோமம் , உற்சவர் அம்மன் பூப் பல்லக்கில் ஊர்வலம், சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, வரும் 29-ஆம் தேதி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதிக்கிறார்கள். தீக்குண்டத்தை கோயில் தர்மகர்த்தா ஆர்.ராஜா சுவாமிகள் மலர் தூவி தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி, 10 நாள்களுக்கு பகலிலும் இரவிலும் அன்னதானம் நடைபெறுகிறது. முன்னதாக , கணபதிஹோமம், 1008 கிலோ குங்கும அபிஷேகம், மங்கள சண்டி ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. 
தீமிதி உற்சவ ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அன்னதானக் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
விழாவை முன்னிட்டு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்திரமௌலி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com