திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய சித்திரைப் பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற கொடியேற்றம். (வலது) சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான். 
திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற கொடியேற்றம். (வலது) சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான். 

திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய சித்திரைப் பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுகிறது. அதேபோல் இந்தாண்டு சித்திரைப் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் 30 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகன் துவஜாரோக மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயிலில் அமைந்துள்ள கொடி மரம், மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
பின்னர், மலைக்கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 7.30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோயில் மாடவீதிகளில் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
தொடர்ந்து, காலை 9 மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கேடய உலா உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல், சனிக்கிழமை (ஏப்ரல் 21) காலை 9.30 மணிக்கு வெள்ளி சூர்ய பிரபை, இரவு 7 மணிக்கு பூத வாகனத்திலும், 22 -ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு ஆட்டுக் கிடாய் வாகனத்திலும், 23-ஆம் தேதி காலை பல்லக்கு சேவையும், இரவு 7 மணிக்கு வெள்ளி நாக வாகனத்திலும், 24 -ஆம் தேதி அன்ன வாகனத்திலும், இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்திலும், 25 -ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 7 மணிக்கு யானை வாகனத்தலும், 26-ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெள்ளித் தேரிலும், 27 -ஆம் தேதி காலை யாளி வாகனத்திலும், இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும், இரவு 8 மணிக்கு அருள்மிகு தெய்வானை அம்மையார் திருக்கல்யாணமும், 28 -ஆம் தேதி, காலை கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கதம்பப் பொடி விழாவும், இரவு 8 மணிக்கு அருள்மிகு சண்முக சுவாமி உற்சவமும், 29 -ஆம் தேதி, காலை 5 மணிக்கு தீர்த்தவாரியுடன், அருள்மிகு சண்முகசுவாமி உற்சவமும், மாலை 5 மணிக்கு கொடி இறக்கமும், 30 -ஆம் தேதி மாலை 7 மணிக்கு சபதாபணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com