ஏழுமலையானுக்கு 'கல்யாண ரதம்' பேருந்து நன்கொடை

ஏழுமலையானுக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 'கல்யாண ரதம்' பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கல்யாண ரதம்.
திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கல்யாண ரதம்.

ஏழுமலையானுக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 'கல்யாண ரதம்' பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது.
தேவஸ்தானம் வெளியூர்களில் சீனிவாச கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது. 
அந்தப் பகுதிகளுக்கு உற்சவ மூர்த்தி சுவாமி சிலைகளைக் கொண்டு செல்வதற்கு கல்யாண ரதம் என்ற பேருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
அதுபோன்ற பேருந்து ஒன்றை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் மகன் ஹர்ஷவர்தன் தங்களது ஹர்ஷா டொயோட்டா வாகன ஏஜென்சி மூலம் ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினார். 
ஏழுமலையான் கோயில் எதிரில் செவ்வாய்க்கிழமை காலையில் அந்தப் பேருந்திற்கு பூஜை செய்து அதன் சாவியை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு பெற்றுக் கொண்டார். அதன் மதிப்பு ரூ.60 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com