துலாபார காணிக்கை செலுத்தும் வழக்கம் உள்ள ஒரே சிவன் கோயில்! 

வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வழக்கம் திருவண்ணாமலை, கெங்காபுரம் கிராமத்தில்
துலாபார காணிக்கை செலுத்தும் வழக்கம் உள்ள ஒரே சிவன் கோயில்! 

வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வழக்கம் திருவண்ணாமலை, கெங்காபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு கெங்காதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது என்றால் அது அச்சரியமாகத்தான் உள்ளது. 

குதிரை வடிவுடன் கூடிய ரிஷபம்

முன்பொரு சமயம் இந்திரன் சாபத்தினால் பூமியில் அவதரிக்க நேர்ந்தது. இந்திரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தான். இறைவன் அவனுக்கு நீண்ட நாட்களாக தரிசனம் அளிக்காமல் இருந்தால். இந்திரனின் கடும் தவத்தினால் இறைவன் அவருக்கு அசரீரி மூலமாகப் பக்கத்தில் துர்வாசர் பிரதிஷ்டை செய்த கெங்காதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. 

அங்குச் சென்று இறைவனை வணங்கி பின் அதன் மேற்குபுறத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவனைந வணங்கி பின் கோனைப்புதூரில் உள்ள சிவனையும் வணங்கி இவ்விடத்தில் வந்து பூஜை செய்தால் உனக்கு காட்சி கிடைக்கும் என்று கூறியதன் பேரில் இந்திரனும், அவ்வாறே செய்தான். 

சிவபெருமானும் இந்திரனுக்கு காட்சி தருவதற்காக கிளம்பும் வேளையில் நேரமாகிவிட்டபடியால் ரிஷபத்தில் மேல் ஏறிக்கொண்டு இந்த ரிஷபம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லுமா என்றும், அதே நேரம் இதுவே ஒரு குதிரையாக இருந்தால் நாம் விரைவில் இந்திரனுக்கு காட்சி தரலாமே என்று எண்ணினார். இது ரிஷபத்திற்கு தெரிந்து ஈசன் நம்மைப் பற்றி இப்படி நினைத்துவிட்டாரே என்று எண்ணி ஈசனின் எண்ணப்படி குதிரை முகத்துடன் வடிவெடுத்து ஈசனை குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து சென்று ஈசனின் எண்ணத்தைப் பூர்த்தி செய்தது. எனவே தான் இத்திருத்தலத்தில் குதிரை வடிவுடன் கூடிய ரிஷபம் அமைந்துள்ளது. 

இந்த ஆலயம் மிகவும் சிதிலமடைந்து சிவன், அம்பாள், முருகன், பெருமாள், ஐயப்பன், நவக்கிரகம், ஆஞ்சநேயர் மற்றும் பைரவர் சன்னதிகள் கட்டப்பட்டு 13.04.2014-ல் மிகவும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

துலாபார காணிக்கை 

சிவஸ்தலங்களில் துலாபார காணிக்கை செலுத்தும் வழக்கம் எங்கும் இல்லை. ஆனால் இந்த சிவஸ்தலத்தில் துலாபார காணிக்கை செலுத்தும் வழக்கம் உள்ளது. பக்தர்கள் தங்களின் வேண்டுதலின்படி காரியபலிதம் ஆனவுடன் இங்கே வந்து துலாபார காணிக்கை செலுத்துகிறார்கள். இங்கே இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. 

சிவன் அருள் கொண்ட இத்திருத்தலத்தில் விளம்பி வரும் சித்திரை மாதம் 29-ம் நாள் 12.05.18 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு குழந்தை வரம் வேண்டி ஸ்ரீ சந்தான கோபால யாகம் மற்றும் சித்திரை 30-ம் நாள் 13.05.18 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சுயம்வர தடை நீங்க ஸ்ரீ கந்தர்வ ராஜ யாகம்(சுயம்), ஸ்ரீ ஸ்வயம்வர கலா பார்வதி யாகம் நடைபெற உள்ளதால் ஆண்/பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

பிரதி மாதம் 2 மற்றும் 4-வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த யாகம் தொடர்ந்து நடைபெற உள்ளது. இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம். ஆரணியிலிருந்து சேத்துபட்டு வழியில் 12-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

மேலும் விபரங்களுக்கு சுந்தரேசன் - 9043378922 / நந்தகோபால் - 9444360042 / குமார் - 9884061594 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை (Nithya Seva Trust. State Bank of India, Chinmaya Nagar Branch A/c No.34648177527 (SB) 

IFSC Code SBIN0007990 MICS Code 600002070) என்ற பெயரில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com