இந்த வாரப் பலன்களை படித்துவிட்டீர்களா?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வாரம் (ஆகஸ்ட் 3 - ஆகஸ்ட் 9 ) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 
இந்த வாரப் பலன்களை படித்துவிட்டீர்களா?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வாரம் (ஆகஸ்ட் 3 - ஆகஸ்ட் 9 ) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்கள் பெயர் புகழ் உயரும். சிறப்பான நேரமிது. எல்லா செயல்களிலும் உங்களுடைய தனித்தன்மை வெளிப்படும். இடையூறுகளைசாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். திட்டமிட்டபடி வேலைகளை முடிப்பீர்கள். சுபச்செய்திகளால் மனம் நிம்மதி அடையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். பணவரவும் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக இருக்கும். கூட்டாளிகளிடம் நல்ல முறையில் பழகி வரவும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும்.  கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். 

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். ரசிகர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பும் பெறுவீர்கள். பெண்மணிகள் சூடான வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். மாணவமணிகள் கூடுதல் மதிப்பெண்களை அள்ளுவார்கள். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படித்து கந்தனை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 4.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வேலைத் தொந்தரவுகளுக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட செயல்கள் தட்டுத்தடுமாறிப் போகும். இதனால் வீண் அலைச்சல்களுக்கு ஆளாவீர்கள். உடல் சோர்வும் உண்டாகும். ஆனாலும் வார இறுதியில் இத்தகைய நிலைமைகள் மாறும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சாதுர்யத்துடன் செய்து முடிப்பார்கள். பயணங்களால் நல்ல அனுபவங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்.விவசாயிகளுக்கு இந்த வாரம் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கொள்முதல் லாபம் சீராகவே இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களின் திறமையை வெளிப்படுத்துவர். பெண்மணிகள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டால் அநாவசியக் குழப்பங்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் 
காண்பர். 

பரிகாரம்: பெருமாள் கோயிலுக்கு புதன்கிழமை சென்று வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தாரிடம் பாசம் அதிகரிக்கும். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகள் வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். சிறு தடைகள் ஏற்படினும் அவற்றை சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபங்கள் அதிகரிக்கும். புதிய ஸ்திர சொத்துகளை வாங்க முற்படுவீர்கள். 

அரசியல்வாதிகளைத் தேடி புதிய பதவிகள் வரும். அதை நல்ல முறையில் பயன்படுத்திப் பெயரும் புகழும் பெறவும். கலைத்துறையினரின் திறமைக்கு சவால்கள் உண்டாகலாம். ரசிகர்களின் ஆதரவுண்டு. பெண்மணிகள் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். தேவைக்கேற்ற பணவரவு பெறுவீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும்.  

பரிகாரம்: திங்கள்கிழமையில் விநாயகரையும் செவ்வாயன்று துர்க்கையையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 5.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

திட்டமிட்ட வேலைகளில் சிறிது காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் கவனிக்க வேண்டி வரும். வெளியூர் பயணங்களில் அனுகூலங்களை எதிர்பார்க்க முடியாது. பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நிகழும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைத்து பிரச்னைகளில் சிக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சற்று லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் நன்றாக முடியும். 

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம். கட்சி மேலிடத்தில் நற்பெயர் எடுக்க முயலுங்கள். கலைத்துறையினரின் திறமைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். ஒப்பந்தங்கள் யாவும் லாபகரமாகவே முடியும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். 

பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்கள் மதிப்பு மரியாதை உயரும். அலைச்சல் அதிகமானாலும் உடல் நலத்தில் குறைவு இருக்காது. பணப்புழக்கத்தில் பிரச்னை ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். பெற்றோர் வழியில் சோதனைகள் உண்டாகலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் திட்டமிட்டுச் செயலாற்ற கற்றுக்கொள்ளவும். பிறரிடம் பொறுப்புகள் ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரிய நேரிடலாம்.  புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகள் கடுமையாக உழைத்து மகசூலைப் பெருக்க வேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமற்ற திருப்பங்கள் ஏற்படும். கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும். சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தாலும் கைநழுவிப்போக வாய்ப்புண்டு. பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரிக்கவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற கடினமாக உழைப்பார்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று அங்காரகனை தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 4, 6.

சந்திராஷ்டமம்: 3.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். சுபகாரியங்கள் கைகூடும். வழக்கு விஷயங்கள் நல்லபடியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். செல்வாக்கு உயரும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அவநம்பிக்கைகள் அகலும். வியாபாரிகள் சில சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். கூட்டாளிகளிடம் சற்று எச்சரிக்கையுடன் பழகவும். விவசாயிகளுக்கு விளைச்சல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடன்உழைப்பவர்களை அரவணைத்துச் செல்லவும்.  

அரசியல்வாதிகளுக்கு கட்சியில்  மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பல நாள்களாக வராமலிருந்த பணம் தேடி வரும். பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். மனதை ஒருமுகப்படுத்தும் கலையை கற்றுக்கொள்ளவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று பெருமாள்} தாயாரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 7.

சந்திராஷ்டமம்: 4, 5.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உயர்ந்தவர்களைச் சந்தித்து திட்டமிட்ட வேலைகளைச் சுமுகமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை  சிறப்பாக அமையும். உறவினர்கள் மூலம் சிறு தொல்லைகள் ஏற்படும். செலவுகளும் சற்று கூடும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் சுலபமாக நிறைவேறும். சக ஊழியர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே இருந்து வருவார்கள். வியாபாரிகள் துணிந்து முதலீடுகளைச் செய்து எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். கூட்டாளிகளை முழுவதும் நம்பவேண்டாம். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். வாய்க்கால் வரப்பு பிரச்னைகளைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளின் பொதுச்சேவை சிறக்கும். மேலிடத்தின் அனுகூலம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு சீராகவே இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.  பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. 

மாணவமணிகள் படிப்பில் அக்கறையுடன் செயல்படவும். விடியற்காலையில் படிப்பது நல்லது.

பரிகாரம்: ஆஞ்சநேய பெருமானை தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 5,  8. 

சந்திராஷ்டமம்:  6, 7.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தெய்வ அனுகூலத்துடன் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. உஷ்ண உபாதைகளினால் உடல் நலம் பாதிக்கப்படலாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். மேலதிகாரிகள் உங்கள் சமயோசித செயலைப் பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள். நண்பர்களின் உதவியுடன் முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைப் பெருக்குவர். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும். கையிருப்புப் பொருள்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எல்லோராலும் பாராட்டப் படுவார்கள். புதிய பதவிகளில் அமர்ந்து மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் கிட்டும். பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வர்.

குடும்பத்தில் மதிப்பு உயரும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று அனைவராலும் பாராட்டப் படுவார்கள். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயிலில் தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 7.

சந்திராஷ்டமம்:  8, 9.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். அனைத்துச் செயல்களிலும் உங்கள் முத்திரையை பதிப்பீர்கள். வசீகரமான பேச்சின் மூலம் பிறரைக் கவர்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உங்கள் செல்வாக்கு உயரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு குறைந்த உழைப்பில் அதிக பலன் கிடைக்கும். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தேவைக்கு ஏற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். விவசாயிகளுக்கு கொள்முதல் வியாபாரங்களில் அதிக லாபம் கிடைக்கும். கால்நடைகளாலும் நல்ல வருமானம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய பொறுப்புகளும் தேடி வரும். கலைத்துறையினருக்கு இது சாதகமான நேரம். புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்றி வெற்றி நடைபோடுவீர்கள். பெண்மணிகள் கணவரிடம்  ஒற்றுமையை காண்பார்கள். குழந்தைகளுக்கான கடமைகளைச் செவ்வனே செய்து மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் அனுகூலமான நிலைமை ஏற்படும். 

பரிகாரம்: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை மனதார வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 9. 

சந்திராஷ்டமம்:  இல்லை. 

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்பு, மரியாதைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உறவினர்களின் மனக்கசப்புக்கு ஆளாக நேரிடும். சில நேரங்களில் மனக்கவலைகளுக்கு ஆளாவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகள் குறித்த காலத்திற்கு முன்பாக முடிந்துவிடும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவர்.  விவசாயிகளுக்கு லாபம் குறையும். இதனால் கூடுதல் வருமானத்தைப் பெற தோட்டப்பயிர்கள் பயிரிட்டு லாபம் பெறலாம். 

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வரவேற்புகள் குறைவாக இருந்தாலும் உங்கள் திறமை எள்ளளவும் குறையாது. பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். 

காரணமில்லாமல் மனதில் சற்று அமைதி குறையும். உடல்நலமும் சிறிது பாதிக்கப்படும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: மஹாவிஷ்ணுவையும் துர்க்கையையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 6,  9. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பொருளாதாரத்தில் சீரான நிலைமை தென்படும். திட்டமிட்ட வேலைகளில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். இருப்பினும் திட்டமிட்ட வேலைகளைக்  கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொள்முதலில் சுமாரான லாபமே கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களைத் தேடி செல்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருப்பினும் லாபம் குறைவாகவே இருக்கும். புதிய கால்நடைகளை வாங்கிப் பலன் பெறலாம். 

அரசியல்வாதிகள் அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளிலும் வெற்றி பெறுவார்கள். 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 8,  9. 

சந்திராஷ்டமம்:  இல்லை. 

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். குதூகலம் கூடும் நேரமிது. மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் செய்ய நேரிடும். இடையூறுகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் பிறக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் திட்டமிட்டு முன்கூட்டியே செயல்படவும்.  மேலதிகாரிகளிடம் இணக்கமாக நடந்துகொண்டால் மேலும் நன்மை அடையலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகளுக்கு மகசூல் சற்று மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகைகள் லாபம் தராது.

அரசியல்வாதிகள் கவனமாகப் பேசவும். குறிப்பாக மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினர் உழைப்பிற்குத் தகுந்த  பலனை அடைவர்.  பெண்மணிகள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடையலாம். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றமடைவார்கள். விளையாட்டில் ஆர்வம் குறையும். 

பரிகாரம்: இம்மையிலும் நன்மை தரும் சிவபெருமானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 6,  9. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com