ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி 

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல ஆகஸ்ட் 8 முதல் வரும் 14-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி 

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல ஆகஸ்ட் 8 முதல் வரும் 14-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பெரும் விமரிசையாக நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு ஆடி அமாவாசைக்கு நேற்று முதல் மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் தேவையான மின்விளக்குகள் மற்றும் சூரியசக்தி மின்விளக்குகள், குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், வயதான பக்தர்களுக்காக டோலி வசதியும், அவசர மருத்துவ சிகிச்சை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

பக்தர்கள் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com