ஆடிப் பூரத்தை முன்னிட்டு சென்னை ஸ்ரீ காளிகாம்பாளுக்கு வளையல்கள் அணிவித்து வழிபாடு!

சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிபூரத்///
ஆடிப் பூரத்தை முன்னிட்டு சென்னை ஸ்ரீ காளிகாம்பாளுக்கு வளையல்கள் அணிவித்து வழிபாடு!

சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிபூரத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. 

அன்னை ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ காளிகாம்பாள் எனும் திருநாமம் கொண்டு சர்வ மங்களகாரிணியாகவும், சர்வ துக்கவிமோசினியாகவும், சர்வ விக்னநிவாரிணியாகவும், சர்வவியாதி விநாசினியாகவும், சர்வ சௌபாக்யதாயினியாகவும் ஸ்ரீ சக்ர சாம்ராஜ்ஜினியாய் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். 

இத்திருக்கோயிலில் ஆடி மாதம் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் ஊஞ்சல் உற்சவமும், அதைத்தொடர்ந்து பத்து ஞாயிற்றுக்கிழமைகளில் பால், இளநீர், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பங்கள் என ஒவ்வொரு வாரமும் 108 குடம் கொண்டு மூலவர் ஸ்ரீ காளிகாம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நேற்று ஆடிப் பூரத்தை முன்னிட்டு அன்னை ஸ்ரீ காளிகாம்பாளுக்கு எண்ணற்ற வளையல்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோன்று உற்சவ திருமேனிக்கும் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இந்தக் காட்சியை திரளான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com