அனைவரையும் கவர்ந்த சென்னை நாகஸ்வர வித்வான்கள்

திருப்பதி ஏழுமலையானுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மகா சம்ப்ரோக்ஷண விழாவின் போது சென்னையைச் சேர்ந்த நாகஸ்வர வித்வான்களின் வாசிப்பு அனைவரையும் கவர்ந்தது. 
அனைவரையும் கவர்ந்த சென்னை நாகஸ்வர வித்வான்கள்


திருப்பதி ஏழுமலையானுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மகா சம்ப்ரோக்ஷண விழாவின் போது சென்னையைச் சேர்ந்த நாகஸ்வர வித்வான்களின் வாசிப்பு அனைவரையும் கவர்ந்தது. 
விழாவில் வியாழக்கிழமை மதியம் ஏழுமலையான் கோயில் தங்க வாசல் அருகில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் உற்சவமூர்த்திகளுக்கு சாலிம்பு, சுத்தி, நிவேதனம் உள்ளிட்டவை நடைபெற்றன. 
ஏழுமலையானுக்கும் உற்சவ மூர்த்திகளுக்கும் நிவேதனம் நடைபெறும்போது, அருகில் உள்ள கண்டா மண்டபத்தில் ஏற்படுத்தி உள்ள பெரிய மணிகள் ஒலிக்கப்படும். இந்த ஒலியை கேட்கும் அனைவரும் ஏழுமலையானுக்கு நிவேதனம் சமர்பிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வர்.
சாதாரணமாக இந்த மணிகள் 15 நிமிடங்கள் மட்டும் தொடர்ந்து ஒலிக்கப்படும். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மகா நிவேதனம் நடைபெற்ற போது, மணி அடிக்கும் ஊழியர் ரவி, தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் மணியை அடித்தார். பெரிய மணிகளை தொடர்ந்து ஒருவர் அமர்ந்த நிலையில் அடிப்பது என்பது இயலாத செயல். ஆனால் அவர் தொடர்ந்து இடைவிடாமல் மணியை அடித்தது அவர் ஏழுமலையான் மேல் கொண்டுள்ள பக்தியை பறைசாற்றியது. அவரை தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் பாராட்டினர்.
அதேபோல் நிவேதன சமயத்தில் சென்னையைச் சேர்ந்த நாகஸ்வர வித்வான் எம்.கே.எஸ் சிவா, டோலு வித்வான் எம்.கே.எஸ் நடராஜன் நாகவராளி, தியாகராஜ கீர்த்தனை உள்ளிட்டவற்றை வாசித்தனர். இதனை அனைவரும் ரசித்தனர். வித்வான்களை தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டி, பரிசுகளை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com