ஜாதகப்படி நவக்கிரக மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? 

ஒவ்வொரு ராசி கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்தவகையில், நவக்கிரகங்களுக்கும் ஒவ்வொரு ராசி கற்கள் உண்டு.
ஜாதகப்படி நவக்கிரக மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? 

ஒவ்வொரு ராசி கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்தவகையில், நவக்கிரகங்களுக்கும் ஒவ்வொரு ராசி கற்கள் உண்டு.

நவரத்தின கற்கள் பதித்த நவக்கிரக மோதிரம் ஒருவருக்குப் பொருந்திவிட்டால் அவர் மிகச் சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். 

நவ அம்சங்கள் உங்களுக்குப் பொருந்தும் என்று தான் அர்த்தம். அதாவது சாதனை படைப்பதில், வெற்றி பெறுவதில், குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, உயர் பதவி என அனைத்தும் உங்களுக்கு உங்களுக்கே உரியதாக இருக்கும். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றியும் கிடைக்கும். ஆனால், நவரத்தினம் பொருந்திய நவக்கிரக மோதிரம் அனைவருக்கும் ஏற்றுபுடையதாய் இருக்காது.

இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்.....?

மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நவரத்தினத்தை அணியலாம்.

ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம். கிரகஸ்தர்கள் (திருமணமானவர்கள்), இரவில் அணியக் கூடாது. பெண்கள் நவரத்தின மோதிரத்தை அணிவதால் கிரக தோஷம் ஏற்படும். ஜாதகத்தை நன்கு ஆய்வு செய்து அதற்குத் தகுந்தாற்போல் கற்களின் வடிவமைப்பும் உலோகத்தையும் இணைத்து அணிந்தால் மட்டுமே எண்ணிய பலன்கள் அளிக்கும். 

எண் கணிதப்படி 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணியக் கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதிரம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிந்துகொள்ளலாம். இல்லையெனில் சாதகமற்ற சூழல் ஏற்படலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com