இன்று கார்த்திகை அமாவாசை: முன்னோர்களின் ஆசியைப் பெறுவது சிறப்பைத் தரும்!

நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள்..
இன்று கார்த்திகை அமாவாசை: முன்னோர்களின் ஆசியைப் பெறுவது சிறப்பைத் தரும்!


நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதைக் காட்டிலும், அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிலிருந்து ஊரைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.

புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நம்புகிறார்கள். அமாவாசைக்குப் பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம். எனவே வளர்பிறையின் துவக்க நாளில் புதிய காரியங்களை ஆரம்பிப்பது நல்லதென்று நம்புகிறார்கள். 

சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாத நாள் அதாவது பூமிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும். எனவே இருட்டு பொழுதில் நற்காரியங்களை செய்யக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி? எது தவறு? என்று முடிவெடுப்பது மகா சிரமமான காரியம். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று பொதுவாக சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் அது சரியல்ல.

இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும். அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷண சக்தியும் மிக அதிகமாக இருக்கும். இதனால், மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல. ஆனால் புதிய காரியங்களைத் துவங்குதல் கூடாது என்பதே சரியான கருத்தாகும்.

அமாவாசை அன்று விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்யங்கரா தேவி, ஸ்ரீவாராஹி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி ஆகிய தெய்வங்களை வழிபடலாம். 

அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com