மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 2018-19-ஆம் ஆண்டுக்கான சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தும்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி செலுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி செலுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்.


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 2018-19-ஆம் ஆண்டுக்கான சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தும் நிகழ்ச்சியை இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் முக்கிய விழாவாக கருதப்படும் தைப்பூச பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, கார்த்திகை மாதம் தொடங்கி சக்தி மாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகத்தை செய்கின்றனர். 3 அல்லது 5 நாள்கள் விரதம் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் குடும்பம் குடும்பமாக இருமுடி செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. 
இந்த ஆண்டுக்கான இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது. 
முன்னதாக கருவறை அம்மன் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சுயம்பு திருவுருவச் சிலைக்கு புதன்கிழமை இயற்கை வழிபாடு செய்யப்பட்டபின் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முதலில் 9 சிறுமியர்களுக்கும், 9 தம்பதியினருக்கும் இருமுடி அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சி ஜனவரி 21-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக தகவல் நிலையங்கள், வாகன நிறுத்துமிடம், அன்னதான கூடம், முதலுதவி, மருத்துவசேவை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
பல்வேறு நகரங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் இருமுடி செலுத்த வருவதற்காக தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com