ஜோதிட விதிப்படி ஆண் குழந்தை யாருக்கு?

ஜோதிட ரீதியாக ஆண் மகவு பிறக்கும் பாக்கியம் யாருக்கு உள்ளதென்று ஜோதிட விதிகள்..
ஜோதிட விதிப்படி ஆண் குழந்தை யாருக்கு?

ஜோதிட ரீதியாக ஆண் மகவு பிறக்கும் பாக்கியம் யாருக்கு உள்ளதென்று ஜோதிட விதிகள் மூலம் ஜோதிட ரத்னா தையூர், சி. வே. லோகநாதன் தெளிவாக நமக்கு விளக்கியுள்ளார். 

ஜோதிட விதி :-1
5-ம் பாவம் மேஷம், ரிஷபம், கடகமாக இருக்க வேண்டும். 

விளக்கம்:-
பின்வரும் லக்கின ஜாதகருக்கு அந்த லக்கினத்துக்கு 5-ம் இடமாக மேஷம், ரிஷபம், கடகமாக இருக்கும். 

தனுசு லக்கின ஜாதகருக்கு, மேஷம் 5 ஆம் இடமாக வரும். 

மகர லக்கின ஜாதகருக்கு, ரிஷபம் 5 ஆம் இடமாக வரும். 

மீன லக்கின ஜாதகருக்கு, கடகம் 5 ஆம் இடமாக வரும். 

இந்த 3 லக்கின ஜாதகருக்கு, ஆண் குழந்தை நிச்சயம். 
 
ஜோதிட விதி :- 2
5-ம் அதிபதி. 5-ம் பாவம் சுப கிரக தொடர்பு (சேர்க்கை / பார்வை) இருத்தல் வேண்டும். 

விளக்கம்:-

இயற்கை சுபர்கள் :- புதன், குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் (அல்லது)
 
லக்கின சுபர்கள் :- அதாவது பாதகாதிபதி, மாரகாதிபதிகள், அஷ்டமாதிபதி தவிர.

இவர்கள் 5-ஆம் அதிபதியாகவோ, 5 ஆம் பாவத்தில் அமர்ந்தோ, சேர்ந்தோ, பார்வை பெற்றோ இருப்பது.

இப்படி அமையப்பெறும் ஜாதகருக்கு, ஆண் குழந்தை நிச்சயம். 

 
ஜோதிட விதி :- 3
5-ம் பாவத்தில் உள்ள கிரகம் ஆண் நக்க்ஷத்திரத்தில் அமர வேண்டும். 

விளக்கம்:-

ஆண் கிரகங்கள் மற்றும் அவற்றின் நக்ஷத்திரங்கள் :-  

சூரியன் -  கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 

செவ்வாய் - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் 

குரு - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 

5 ஆம் பாவத்தில் உள்ள கிரகம் மேற்படி நக்ஷத்திரத்தில் அமர்ந்தால், ஆண் குழந்தை நிச்சயம். 

ஜோதிட விதி :- 4
குரு பகவான் சுய சாரம் பெற்றோ அல்லது சுப கிரக சேர்க்கை / குருவின் தொடர்பு பெற்றோ இருப்பது .

விளக்கம்:-

குரு, குருவின் சுய சாரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நக்ஷத்திரங்களை பெற்றோ அல்லது இயற்கை சுபர்கள் அல்லது லக்கின சுபர்களின் தொடர்பு பெற்றோ இருப்பின் ஆண் குழந்தை நிச்சயம். 

ஜோதிட விதி :- 5
5-ம் பாவம், ஆண் ராசியாக இருத்தல் வேண்டும். 

விளக்கம்:-
எந்த லக்கினமானாலும், அதன் 5 ஆம் பாவம் ஆண் ராசியாக இருத்தல் வேண்டும் 

அதாவது, மேஷம் , மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகள் 5 ஆம் பாவமாக இருப்பின் ஆண் குழந்தை நிச்சயம். 

ஜோதிட விதி :- 6
5-ம் அதிபதி, ஆண் கிரகமாகி அது, ஆண் ராசியில் இருந்து, நவாம்சத்திலும் ஆண் ராசியில் இருந்தால், முதலில் ஆண் குழந்தை பிறக்கும். 

விளக்கம்:-
5 ஆம் அதிபதி, ஆண் கிரகமாகி, அதாவது ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு 5 ஆம் அதிபதியாகி, அது ஆண் ராசிகளான, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவற்றுள் இருந்து,
நவாம்சத்திலும், ஆண் ராசியில் இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகருக்கு முதலில் ஆண் குழந்தை பிறக்கும் 

மேற்கூறிய அனைத்தும் அடிப்படை ஜோதிட விதிகளே ஆகும். இதன் மூலம் 100 சதவீதம் ஆண் குழந்தை பிறக்கும் என கணித்திட முடியாது. பாமரர்கள் ஜோதிட அறிவை பெறுவதற்கும், தமக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டா என அறிவதற்கும் இவைகள் கூறப்பட்டது. மேலும் துல்லியமாக அறிவதற்கு, ஆழ்ந்த ஜோதிட அறிவும், அனுபவமும் உள்ள ஜோதிடரை அணுகுதல் சிறந்த தீர்வாகும்.        
                 
- ஜோதிட ரத்னா தையூர், சி. வே . லோகநாதன்    

தொடர்புக்கு : 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com