மாதங்களில் நான் மார்கழி! 

மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் கூறியிருக்கிறார்.
மாதங்களில் நான் மார்கழி! 

மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் கூறியிருக்கிறார். ஆண்டாள் நாச்சியாரும் மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து பரந்தாமனையே மணாளனாகப் பெற்றார். மார்கழி மாதம் வைணவ மாதமாகவே ஆகிவிட்டது என்றே கூறலாம். 

ஒரு சமயம் உலகமே பிரளயத்தில் மூழ்கிய பொழுது அதை மீண்டும் தோற்றுவிக்க நினைத்த ஸ்ரீ பகவான் ஸ்ரீ பிரும்மாவை சிருஷ்டித்தாராம். அப்பொழுது இரண்டு அரக்கர்கள் ஸ்ரீ பிரும்மாவையே எதிர்க்கத் துணிந்தார்களாம். அவர்களை தடுத்து நிறுத்த வந்த பகவானையே எதிர்த்து நின்ற அரக்கர்களை ஸ்ரீ வைகுண்டநாதன் வதம் செய்ய வந்த பொழுது இரு அரக்கர்களும் ஒரு வேண்டுதல் வைத்தார்களாம். அதாவது, "உங்கள் அருளால் நாங்கள் சித்தி அடைந்து வைகுண்ட வாசம் பெற வேண்டும்." என்றார்களாம்.

அவர்களின் வேண்டுகோளை பகவான் ஏற்றாராம். மார்கழி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று வடபுறம் நுழைவாயிலைத் திறந்து அதன் வழியாக பரமபதத்திற்கு அனுப்பி வைத்தாராம். அரக்கர்கள் மனம் மகிழ்ந்து, "எங்களுக்கு அருளிய இந்நன்னாள் பூவுலகில் கொண்டாடப்பட வேண்டும். திருக்கோயில்களில் ஸ்வர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களுக்கும், அவ்வாசல் வழியே கடந்து வெளியேறும் பக்தர்களுக்கு மோட்சப்பிராப்தி தரவேண்டும்" என்றும் மேலும் வேண்டிக் கொண்டார்களாம். 

அவ்வரக்கர்கள் வேண்டிக்கொண்டபடியே மார்கழி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக வைகுண்ட ஏகாதசி விழாவானது இருபது நாட்கள் நடைபெறும். ஏகாதசிக்கு முன்பு பத்து நாட்கள் பகல் பத்து என்றும் ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் இராப்பத்து என்றும் கொண்டாடப்படுகிறது. இந்த இருபது நாட்களிலும் ஸ்ரீ பகவானுக்கு விசேஷ அலங்கார ஆராதனைகள் நடைபெறும். 

விசேஷமான வைகுண்ட ஏகாதசி நன்னாளில் 18.12.2018 ஸ்ரீ பகவானின் திவ்ய திருநாமங்கள் அனைத்தும் அடங்கிய கீழ்கண்ட துதியைக் கூறி வணங்கினால் அசுவமேதை யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நாம் அனைவரும் பெரியோர்கள் காட்டும் நல்வழியைப் பின்பற்றி ஸ்ரீமந் நாராயணனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

ஸ்ரீ வைகுண்ட நாதன் துதி

ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்

வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்

நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்

வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்

வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம்த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம்

ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம்

தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸூதனம்வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸுதேவஜம்

ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம்ஸகலம் நிஷ்கலம் ஸுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம்

ஹிரண்யதனுஸங்காஸம் ஸுர்யாயுத ஸமப்ரபம்மேகஸ்யாமம் சதுர்பாஹும் குஸலம் கமலேக்ஷணம்

ஜ்யோதீ ரூமரூபம் ச ஸ்வரூபம் ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம்

ஜ்ஞானம் கூடஸ்தமசலம் ஜ்ஞானதம் பரமம் ப்ரபும்யோகீஸம் யோக நிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம்

ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும்இதி நாமஸதம் திவ்யம் வைஷ்ணவம் கலுபாபஹம்

வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வபாப ப்ரணாஸனம்

ய: படேத் ப்ராதருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர: ஸர்வ பாப விஸுத்தாத்மா: விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான ஸதானி ச

கவாம் லக்ஷஸஹஸ்ராணி முக்திபாகீ பவேந்நர: அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ: 

விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம்.

*திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி (18.12.2018) அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்.

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com