மகா சிவராத்திரி: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை அருகே மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை
நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில், பக்தர் தலையில் தேங்காய் உடைக்கும் பூசாரி பூச்சப்பன்.
நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில், பக்தர் தலையில் தேங்காய் உடைக்கும் பூசாரி பூச்சப்பன்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை அருகே மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இடையகோட்டை அடுத்துள்ள வலையபட்டியில் உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் முதல் தேங்காயை பரம்பரையாளர்கள் தலையில் கோயில் பூசாரி பூச்சப்பன் உடைத்தார். அதைத்தொடர்ந்து வேண்டிய வரம் கேட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் தலையில் அவர் தேங்காய் உடைத்தார். இதில் 10 பெண்கள், 11 ஆண்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியை காண திண்டுக்கல், கரூர், திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com