மகாசிவராத்திரி: ராமேசுவரத்தில் சுவாமி, அம்பாள் தேரோட்டம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.
திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகா சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கு கோபுர வாயில் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். 
இதனையடுத்து, திருக்கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், தக்கார் குமரன் சேதுபதி மற்றும் பொது மக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்ததது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். மாலையில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தங்கக் குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் மேற்கு தெருவில் மண்டகப்படி நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com