வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் தவக்காலத் தொடக்க நிகழ்ச்சியாக சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு சிலுவையிடும் பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம்.
புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு சிலுவையிடும் பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் தவக்காலத் தொடக்க நிகழ்ச்சியாக சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ளது புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். 
பசலிக்கா அந்தஸ்து பெற்ற இப்பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு, ஈஸ்டர் பண்டிகை ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் கிறிஸ்தவர்களின் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 
இந்த 40 நாள்களில் கொடை அளித்தல், அசைவம் தவிர்த்தல் போன்றவற்றை கிறிஸ்தவர்கள் பின்பற்றுவது வழக்கம். கிறிஸ்தவர்களின் தவக்காலத் தொடக்க நிகழ்வாகக் கொண்டாடப்படும் சாம்பல் புதன் நிகழ்ச்சி வேளாங்கண்ணி பேராலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கொங்கனி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
வேளாங்கண்ணி பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார், பங்குத் தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம் மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்கள், குருக்கள்கள் வழிபாடுகளை நடத்தினர்.
பின்னர், கடந்த ஆண்டு நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட குருத்தோலைகள் சாம்பலாக்கப்பட்டு, அந்தச் சாம்பலைக் கொண்டு பக்தர்களின் நெற்றியில் சிலுவையிடப்பட்டது. இந்த வழிபாடுகளில் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com