இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்? 

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (பிப்ரவரி 16 - பிப்ரவரி 22) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்? 

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (பிப்ரவரி 16 - பிப்ரவரி 22) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன்பெறுவோம்.


மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

செயல்களில் தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை சரியாகச் செய்து முடிப்பீர்கள். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பிறருக்கு உங்களாலான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தீயவர்களின் தொடர்பைத் தவிர்ப்பது நல்லது. 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். சக பணியாளர்களிடம்  சுமுகமாகப் பழகுவீர்கள்.  வியாபாரிகளுக்கு இது வாபகரமான வாரம். வருமானம் பலவகைகளிலும் பெருகும். விவசாயிகளுக்குத் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகித்து உற்பத்தியைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். எந்த செயலிலும் தேவையில்லாமல் இறங்க வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பல நாள்களாக வராமல் இருந்த தொகை உங்களின் கைக்கு வந்து சேரும். பெண்மணிகள் சரளமான பண வரவால் ஆடை அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். 
மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.  

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16,17.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

செலவுகள் அதிகரிக்கும் வாரமிது. மனதில் ஏற்படும் பயமும் கவலைகளும் மற்ற வேலைகளில் இடையூறுகளை ஏற்படுத்தும். ஆனாலும் வார இறுதியில் இத்தகைய நிலைமை மாறும். பொருளாதாரம் உயரத் தொடங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அனைத்து வேலைகளும் வெற்றிகரமாகவே முடியும். வியாபாரிகள் தங்கள் தொழியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கூட்டாளிகளிடம் சுமூகத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். நீர்வரத்து நன்றாக இருப்பதால் ஊடுபயிரையும் விளைவித்து மேலும் லாபத்தைக் காண்பீர்கள்.  

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் நற்பெயர் வாங்குவீர்கள். மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பொறுப்புடன் நடந்து கொண்டு பிரச்னைகளைத் தவிர்ப்பது நல்லது. பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். 

பரிகாரம்: ஞாயிறன்று சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 16,18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அனைத்து செயல்களிலும் வெற்றிவாகை சூடுவீர்கள். எதிர்பார்த்திருந்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும்.  உடன்பிறந்தோர் உங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வார்கள்.  

உத்தியோகஸ்தர்கள் நலனில் மேலதிகாரிகள் அக்கறை செலுத்துவார்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாகவே இருக்கும். உங்களது வியாபார யுக்தியால் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். விவசாயிகளுக்கு விவசாய உதவியாளர்களால் நல்ல பலன்கள் உண்டாகும். கால்நடைகளால் பால் உற்பத்தி பெருகும்.  

அரசியல்வாதிகளுக்கு கட்சியில்  நல்ல மரியாதை கிடைக்கும். வருமானமும் பலவழிகளில் இருந்து வரும். கலைத்துறையினர் இந்த வாரம் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எதையும் தீர ஆலோசித்த பிறகே புதிய ஒப்பந்தங்களைச் செய்யவும். பெண்மணிகள் பெரியோரின் ஆசிகளைப் பெறுவார்கள். மாணவமணிகளுக்கு வருங்காலக் கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 

பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாளுக்கு தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17,18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்களின் மதிப்பு மரியாதை உயரும். உறவினர்களும் நண்பர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக காணப்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆனால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவுக்குக் குறைவு இருக்காது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக அமையும். கூட்டாளிகளிடம் சுமூகமான உறவை மேம்படுத்திக் கொள்ளவும். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். பொருளாதார நிலை மேம்படும்.  கால்நடைகளால் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். தொண்டர்களின் நலனில் அக்கறை காட்டவும். கலைத்துறையினர் சக கலைஞர்களையும் தயாரிப்பாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும்.  

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,19. 

சந்திராஷ்டமம்: 16,17.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

வருமானத்தில் அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். பெரியோர்களின் உதவியால் திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த நன்மைகளைப் பெற முடியாமல் போகும். தாயின் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. சக ஊழியர்களிடம் நட்புடன் பழகுவதால் தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் புதிய மாற்றங்கள் தென்படும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளால் நல்ல லாபம் உண்டாகும். வராமலிருந்த பழைய பாக்கிகளும் இந்த வாரம் வசூலாகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் ஆர்வம்  அதிகரிக்கும். ஆனாலும் தற்போது புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மேலும் பயணங்கள் தடை படவும் நேரிடலாம். பெண்மணிகள் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோரையும் ஆசிரியரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16,21. 

சந்திராஷ்டமம்: 18,19,20.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிப்பீர்கள். குடும்பத்தில் பொருளாதார வளம் பெருகும். இந்த வாரம் நீங்கள் விரும்பியபடி வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வழக்குகள் நல்லபடியாக முடிவுக்கு வரும். 

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலனைப் பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வீர்கள். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். விவசாயிகள் நினைத்தபடியே புதிய நிலங்களை வாங்குவார்கள். விளைச்சல் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில பிரச்னைகள் தோன்றும். கட்சி மேலிடத்தில் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். ரசிகர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். மாணவமணிகள் கல்வியில் மேன்மையடைய பலமுறை படித்து பயிற்சி செய்யவும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலில் தீபமேற்றி வழிபவும். 

அனுகூலமான தினங்கள்: 17,20. 

சந்திராஷ்டமம்: 21,22.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

எதிர்ப்புகள் மறையும். மற்றவர்கள் மூலமாகவும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆனாலும் உறவினர்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. பயணங்களின்போது மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளவது நல்லது. 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு அனைத்துப் பணிகளும் நன்றாக முடியும். விளை பொருள்கள் விற்பனையில் லாபம் கிடைக்கும். பால் வியாபாரம் சுமாராகவே இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு  மேலிடத்தின் அதிருப்தி குழப்பத்தில் ஆழ்த்தும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். தேவையான ஓய்வை எடுத்துக்கொள்வது நல்லது. பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. 
மாணவமணிகள் சீரிய முயற்சி செய்தால்தான் சராசரியான மதிப்பெண்களையாவது பெறலாம். 

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். சகோதர சகோதரிகள் வழியில் நிலவிய மனக்கசப்பு நீங்கும். வருமானம் படிப்படியாக உயரும். செய்து வரும் தொழிலில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பதால் முன்னேற்றம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் வியாபாரத்தில் பிரச்னைகள் வராது.  விவசாயிகள் கொள் முதலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய குத்தகை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதே சிறந்தது. பெண்மணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 

மாணவமணிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளவும்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19,21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும்.  பண வசதி சரளமாக இருக்கும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால் நஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாகவே இருக்கும். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் முன்னேற்றத்தைக் காணலாம்.  பழைய வழக்குகளால் மனவேதனைக்கு உள்ளாவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். தொண்டர்களுடன் இணைந்து சேவையாற்றுவீர்கள். கலைத்துறையினர் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடுவீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகள் குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.  மாணவமணிகள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்திப் படிக்கவும். விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும். 

பரிகாரம்: சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20,21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) 

பொருளாதாரம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மிகவாதிகளின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். மதிப்பு, மரியாதைக்குக் குறைவு இருக்காது. ஆனாலும் உறவினர்களின் உதவி கிடைக்காது. குடும்பத்தில் அமைதியை உருவாக்க முயல்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவார்கள். சக ஊழியர்களிடமிருந்து விலகியே இருக்கவும். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் விலகும். வாடிக்கையாளர்களை அதிகரிக்க புதிய யுக்தியை கையாள்வீர்கள். விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருளில் லாபம் குறையும். நல்ல விளைச்சலை காண,  நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்தவும்.  

அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறுவார்கள். மேலிடத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு விருது பெறும் யோகமும் உண்டாகும். பெண்மணிகள் குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். கணவருடன் ஒற்றுமையுடன் இருக்க முயல்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 

பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16,21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

லாபகரமான வாரம். நெடுநாளைய  சலிப்புகள் நீங்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் எதுவும் வீண் போகாது. உறவினர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப காரியங்கள் நடத்துவதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். 

உத்தியோகஸ்தர்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் செய்வதைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும். பால் வியாபாரம் செய்வோர் பலன் அடைவார்கள்.  சாகுபடி சிறக்க தேவையான ஆலோசனைகளைப் பெற்று செயலாற்றவும்.  

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர நினைக்க வேண்டாம். கட்சி மேலிடத்திடம் நற்பெயர் வாங்க முயலுங்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறையும். ஆனாலும் பாடகர்களுக்கு இது சாதகமான வாரம். 

பெண்மணிகள் சிக்கனத்தோடு இருப்பதால் குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்னை சீராகும். மாணவமணிகள் வருங்காலத்திற்காக செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17,22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அனைத்துச் செயல்களிலும் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகளின் பலம் குறையும்.  உங்கள் மதிப்பு மரியாதைக்கு எந்தக் குறையும் ஏற்படாது. பயணங்களால் நன்மை உண்டாகும். இனிய பேச்சினால் பிறரைக் கவர்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கெடுபிடிகள் குறையும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரிய நேரிடலாம். கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் கடுமையாக உழைத்துப் பொருளீட்டுவார்கள். கழனிகளை விரிவுபடுத்த நினைப்பீர்கள். கால்நடைகளை நன்றாக பராமரிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் சாதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். பெண்மணிகள் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டால் படிப்பில் கவனத்தைச் செலுத்த முடியும்.

பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலில் தீபம் ஏற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 21,22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com