தரித்திரம் அண்டாமல் இருக்க உங்கள் வீட்டில் இந்த அமைப்பு சரியாக உள்ளதா?

வாஸ்து சாஸ்திரிப்படி நாம் வசிக்கும் வீட்டில் கட்டாயம் இந்த அமைப்பானது சரியாக இருக்க வேண்டும். 
தரித்திரம் அண்டாமல் இருக்க உங்கள் வீட்டில் இந்த அமைப்பு சரியாக உள்ளதா?

வாஸ்து சாஸ்திரிப்படி நாம் வசிக்கும் வீட்டில் கட்டாயம் இந்த அமைப்பானது சரியாக இருக்க வேண்டும். 

வீட்டின் பிளாட்டைப் பொறுத்தவரையில் குடியிருக்கும் அல்லது குடிபோகும் எல்லோருக்கும் தென் கிழக்குப் பகுதியில் சமையலறை அமைக்க முடியாது. ஒரு சாராருக்கு தென்கிழக்குப் பகுதியாக சமையலறை கிடைத்தால் மற்ற பிளாட்டில் இருப்பவர்களுக்கு இதற்கு நேர்மாறாகத்தான் சமையலறை அமையும்.

பொதுவாக இப்படி நேர்மாறாக தென்கிழக்குப் பகுதியாக இல்லாமல் மற்ற பகுதியில் சமையலறை இருக்குமேயானால் ஐம்பது சதவீதம் அனுகூலம் இல்லாமல்தான் இருக்கும். எதிர்பார்த்தபடி வாழ்க்கையில் முன்னுக்குவர முடியாமல் போகலாம்.

சுபகாரியமான சமையல் செய்ய நீண்ட நாள் ஆகலாம். அல்லது சமையலுக்குரியச் செலவுகள் அதிகமாகி கொண்டே போகலாம். சமையல் அறை தென்கிழக்குப் பகுதியில்  அமைந்துவிட்டால் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருந்தவர்கள் கூட படிப்படியாக முன்னேறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறும்.  ஆலமரம் போல் சந்ததி விருத்தியாகும். லஷ்மி கடாட்சம் அந்த வீட்டில் தினமும் பொங்கும்.

'தரித்திரம்' என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இப்படி அமைந்த சமையல் அறையில் சமையல் செய்து சாப்பிட்டவர்களுக்கு அன்ன தோஷம் ஏற்படாது. உணவு சம்பந்தமான எந்த நோயும் ஆயுள் நாள் முழுவதும் ஏற்படாது. ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

இந்த தென்கிழக்கு மூலைக்கு அக்னி மூலை என்று பெயர். இந்த அக்னி மூலை சரியாக அமையாவிட்டாலும், விசேஷமான பலன்களைத் தராது என்றும் சொல்லப்படுகிறது. அக்னி மூலை 90 டிகிரிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அடுப்பு இருக்கும் மேடை 8 அடி நீளம் எட்டு அடி அகலமாக இருப்பின் மிகவும் சிறப்பு.

இப்படி அமைந்துவிட்டால், அந்த வீட்டில் தீ சம்பந்தமான எந்த விபத்தும் ஏற்படாது. கெடுதலான சம்பவங்கள் நடக்காது. எந்தப் பொருளும் இல்லை என்று சொல்லாவண்ணம் செழிப்பாக இருக்கும். இப்படிப்பட்ட பிளாட்டில் குடியிருப்பவர்கள் முதலில் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கினால் போகப் போக செல்வந்தராக செழிப்புடன் வாழ்வார்கள் என்பது அனுபவப்பூர்வமான உண்மை.

அப்படி தென்கிழக்கில் சமையலறை அமைக்க முடியவில்லையெனில் வடமேற்கில் ஒரு சரியான அமைப்பாக பார்த்து அமைப்பது சாலச் சிறந்ததாகும். அப்படி அமையும் பட்சத்தில் சமையல் செய்யும் நபர் கிழக்கு பார்த்த அமைப்பில் நின்று சமைப்பது நல்லது. 

வடகிழக்கு அமைப்பை உடைய சமையலறையில் தொடர்ந்து சமையல் செய்யும் போது குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. ஆக சமையலறை என்பது ஒரு வீட்டில் வாஸ்துப்படி சரியான இடத்தில் இருப்பது நலம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com