இன்று அம்மன் வழிபாடு செய்தால் கூடுதல் பலனாம்!

பொதுவாக அம்மன் வழிபாடு என்பது வழிபாடுகளில் பழமையானதும் முக்கியமானதுமாக கருதப்படுகிறது.
இன்று அம்மன் வழிபாடு செய்தால் கூடுதல் பலனாம்!

பொதுவாக அம்மன் வழிபாடு என்பது வழிபாடுகளில் பழமையானதும் முக்கியமானதுமாக கருதப்படுகிறது. மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகப் போற்றப்படுகிறது. இத்தகைய புண்ணியம் நிறைந்த மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளியில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது சாலசிறந்ததாகும். 

எங்கெல்லாம் அம்மன் கோயில் நிறைந்திருக்கிறதோ, அந்த ஆலயங்களுக்குச் சென்று, அம்பிகையை வணங்கி ஆராதனைகள் செய்து வரலாம். செவ்வாய்க்கிழமையான இன்று கோயில்களில் அம்மாளுக்குச் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். இதில் கலந்து கொண்டு அரளி மாலை சார்த்தி வழிபட்டால், வீட்டில் தடைப்பட்ட மங்கள காரியங்கள் உடனே நிகழும் என்பது ஐதீகம்...!

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் ஆலயங்கள் 

திருவேற்காடு கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதி அன்னை, கன்னியாகுமரி பகவதி, மதுரை ஸ்ரீமீனாட்சி, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள், ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கோவை ஸ்ரீகோனியம்மன், கதிராமங்கலம் வனதுர்கை, திருச்சி உறையூர் வெக்காளியம்மன், பொள்ளாச்சி மாசாணியம்மன், சென்னை திருவொற்றியூர் ஸ்ரீவடிவுடையம்மன் போன்ற அம்பிகை ஆலயங்களில் தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும் என்பார்கள்.

சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழும் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாளை, இந்த நாளில் வணங்குவது கூடுதல் நன்மையளிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com