திருமலையில் இன்று கருட சேவை உற்சவம் ரத்து

திருமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த (ஜனவரி 2) பௌர்ணமி கருட சேவை உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலையில் இன்று கருட சேவை உற்சவம் ரத்து

திருமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த (ஜனவரி 2) பௌர்ணமி கருட சேவை உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
 திருமலையில் கருட சேவை உற்சவம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்பசுவாமி கருட வாகனத்தின் மீது அமர்ந்து மாடவீதியில் எழுந்தருளுவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரளுவர். வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது கருட சேவையைக் காண முடியாத பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் பௌர்ணமி நாளில் கருட சேவையை தேவஸ்தானம் கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
 பௌர்ணமி அன்று நடைபெறும் கருடசேவையின் போது பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லாததால் பக்தர்கள் பொறுமையுடன் நிதானமாக ஏழுமலையானை தரிசித்து ஆரத்தி அளித்து வணங்கி வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 2-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருமலையில் கருடசேவை நடைபெறவிருந்தது. ஆனால் தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலுக்குள் நாலாயிர திவ்ய பிரபந்தம் செய்யப்படும் அத்யயனோற்சவம் நடைபெற்று வருகிறது.
 அதன்காரணமாக தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை மாலை திருமலையில் நடைபெறவிருந்த கருட சேவை உற்சவத்தை ரத்து செய்துள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com