கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலில் ஜன.15-இல் கோ பூஜை

கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலில் மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை நடைபெறவுள்ளது. 

கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலில் மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை நடைபெறவுள்ளது. 
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமம் அருகே கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விநாயகர் கோயில் உள்ளது. 
அனைத்து தேவர்களும் ஒருங்கே இருக்கும் இடமான 27 நட்சத்திர திருக்கோயில்கள், ராகு, கேது சனிபகவான் திருக்கோயில்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பது இக்கோயிலின் சிறப்பாக உள்ளது. 
இக்கோயிலில், பசுவின் அங்கத்தில் அனைத்து தேவர்களும் வாசம் செய்யும் வகையில், மாட்டுப்பொங்கல் அன்று கோ பூஜை செய்து வணங்குகின்றனர். 
27 நட்சத்திர அதிதேவதைகளும், 27 பசுக்களும் இரண்டும் சேர்ந்தவாறு திங்கள்கிழமை ( ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் அன்று, காலை 6 மணிக்கு கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அதுபோல், தொடர்ந்து காலை 9.30 மணிக்கு 51 பசுக்களும், கன்றுகளையும் கொண்டு கோ பூஜை நடத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com