சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிப்பு

சபரிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர்.
மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர்.

சபரிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மகர விளக்கு பூஜையையொட்டி சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வெள்ளிக்கிழமை பந்தளம் வலிய கோயிக்கல் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த திருவாபரணம் பம்பையை ஞாயிற்றுக்கிழமை வந்தடையும். பின்னர் பம்பையில் பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு 
மாலையில், ஜயப்ப சேவா சங்க பக்தர்கள் மூலம் சபரிமலைக்கு கொண்டு வரப்படும். அப்போது சரங்குத்தி வரும்போது நிர்வாக அதிகாரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் மேளதாளங்களுடன் திருவாபரணத்தை வரவேற்பர். அதைத் தொடர்ந்து சுவாமி சன்னிதியை மாலை 6.30 மணிக்கு திருவாபரணம் வந்தடையும். அதன் பின்னர் ஜயப்பன் நடை அடைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 
மாலை 6.45 மணியளவில் மகர நட்சத்திரம் 3 முறை விண்ணில் பிரகாசமாக வந்து மறையும். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஜயப்பா என விண்ணதிர ஓசை எழுப்பி ஜோதி தரிசனத்தை காண்பர். அதைத் தொடர்ந்து பக்தர்கள் மலையில் இருந்து கீழ் இறங்குவர்.
மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு எருமேலிபேட்டை துள்ளல் 11-ஆம் தேதி நடைபெற்றது. வரும் 16 முதல் 19-ஆம் தேதி வரை இரவில் படி பூஜை நடைபெறுகிறது. 20-ஆம் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்தைத் தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்படும்.
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வருகை சனிக்கிழமை நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. அதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பம்பை, சபரிமலை, எருமேலி, நிலக்கல் உள்பட பக்தர்கள் குவியும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சிறப்புப் பேருந்து வசதிகளை போதுமான எண்ணிக்கையில் செய்துள்ளது. அரசுப் பேருந்துகள் மட்டும் பம்பை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com