சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் திருக்கல்யாணத்துக்குப் பிறகு வீதிஉலா வந்த பக்தோசித பெருமாள் மற்றும் ஆண்டாள்.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் திருக்கல்யாணத்துக்குப் பிறகு வீதிஉலா வந்த பக்தோசித பெருமாள் மற்றும் ஆண்டாள்.

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் தை மாதம் முதல் நாளன்று உற்சவர் பக்தோசித பெருமாளுக்கும், ஆண்டாள் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். 
அதன்படி நிகழாண்டும் ஞாயிற்றுக்கிழமை தை மாதப்பிறப்பை யொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 
இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் இருந்து நான்கு கால் மண்டபத்துக்கு உற்சவர் பக்தோசித பெருமாளும், ஆண்டாள் தாயாரும் எழுந்தருளினர். பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 
இதில், சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருளி பாலித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com