தென்பெண்ணையாற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
ஆற்றுத் திருவிழாவையொட்டி, மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரியில் எழுந்தருளிய அருணாசலேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள்.  (இடது) தென்பெண்ணை ஆற்றில் திரண்ட மக்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து ஆற்றுத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருக்கோவிலூர் அருகேயுள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதி கோயில்களில் இருந்து ஏராளமான சுவாமிகள் தீர்த்தவாரிக்காக அணிவகுத்து வந்தன.
திருவண்ணாமலையில் இருந்து உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் தீர்த்தவாரிக்காக கொண்டு வரப்பட்டார்.
இதற்காக, திருவண்ணாமலையில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்ட அருணாசலேஸ்வரர், முருக்கம்பாடி கிராமத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்தார்.
அங்கிருந்து நண்பகல் 12 மணிக்கு மேல் புறப்பட்டு, மணலூர்பேட்டைக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தார். பின்னர், தீர்த்தவாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தீர்த்தவாரியில், மணலூர்பேட்டை வரதராஜ பெருமாள், மாவடி விநாயகர், கங்கையம்மன், மாரியம்மன் உள்ளிட்ட ஏராளமான உற்சவர் சுவாமிகள் பங்கேற்றன.
விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com