மோசமான வானிலை காரணமாக 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மானசரோவரில் சிக்கித் தவிப்பு 

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற 500-க்கும் மேற்பட்ட இந்திய யாத்திரீகர்கள் நேபாளத்தில்
மோசமான வானிலை காரணமாக 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மானசரோவரில் சிக்கித் தவிப்பு 

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற 500-க்கும் மேற்பட்ட இந்திய யாத்திரீகர்கள் நேபாளத்தில் உள்ள சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்திய யாத்ரீகர்கள் சிக்கிமிலிருந்து தங்களது பயணத்தை தொடங்கினர்.  இதில் தமிழகத்தைச் சேர்ந்த 19 பேரும் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், நேபாளின் சிமிகோட் பகுதியில் விமானம் மூலம் சென்று திருப்புவதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினாலும், யாத்ரீகர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ள 500-க்கும் மேற்பட்டோர் அணிய ஆடை இல்லாமலும், சரியான சாப்பாட்டு வசதி இல்லாமலும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று நேபாளில் சிக்கித் தவிக்கும் யாத்ரீகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com