தேரோட்ட விழாவில் அம்மனுக்கு மகாகும்பம்

பெரியநத்தம் பகுதியில் உள்ள சேப்பாட்டியம்மன் கோயிலில் இராப்பிறையார் உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை தேரோட்டத்தில் அம்மனுக்கு ஏற்வையாகும் கும்பட்டு' பூஜை நடைபெற்றது. 
சேப்பாட்டி அம்மன் கோயில் விழாவில் படையலிட்ட பக்தர்கள்.
சேப்பாட்டி அம்மன் கோயில் விழாவில் படையலிட்ட பக்தர்கள்.

பெரியநத்தம் பகுதியில் உள்ள சேப்பாட்டியம்மன் கோயிலில் இராப்பிறையார் உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை தேரோட்டத்தில் அம்மனுக்கு ஏற்வையாகும் கும்பட்டு' பூஜை நடைபெற்றது. 
செங்கழுநீர்ப்பட்டு என்று பண்டைக் காலத்தில் செங்கல்பட்டு நகர் அழைக்கப்பட்டது. இந்த நகரின் பெரியநத்தம் பகுதியில் உள்ள பழம்பெருமையும், வரலாற்றுச் சிறப்பம்சங்களையும் கொண்ட சேப்பாட்டியம்மன் கோயிலை இந்து அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.
இக்கோயிலில் பழமையான சம்பிரதாயப்படி இராப்பிறையார் உற்சவத்தையொட்டி காப்பு கட்டுதல், 2 நாள் அம்மன் வீதி உலா, 2 நாள் தேரோட்டம் நடைபெற்றது. முக்கியமாக விழாவில் பறையக்காரர், தடிக்காரர், பொலிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினர்அம்மனுடைய ஆயுதங்களுடன் சந்திகளுக்கு பூஜைகளை நடத்தினர். 
தேரோட்டத்தின்போது நிலைக்குச் செல்வதற்கு முன்பு பறையக்காரர் சமூகத்தினர், அம்மனுக்கு ஏற்வையாகும் மகாகும்பமிட்டு பூஜைகளை நடத்தினர். கணேசன், பத்தா குடும்பத்தினர் மற்றும் அந்த சமூகத்தினர் பூஜையாக நடைபெறும் கும்பமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
செங்கல்பட்டு களத்துமேடு- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் கோலமிட்டு வைக்கோல் பெரிய அளவில் வட்டமாகப் பரப்பிவைத்து அதன்வேல் தலைவாழை இலைகளை போட்டு 15 கிலோவிற்கு மேல் சமைத்த சாப்பாட்டைக் கொட்டி அதன் மேல் குழம்பு, பொறியல், வழுவல் மீன் வறுவல், முட்டைகள் முறுக்கு, அதிரசம், உள்ளிட்ட பலகாரங்களை சுற்றிவைத்து சுமார் 20, 25 கிலோ எடையுள்ள ஒரு கருவாட்டை வைத்து கும்பமிட்டு படையல் போட்டனர். 
அப்போது தேரில் உலாவந்த அம்மன் முகத்தில் ஆனந்தச் சிரிப்பு காணப்படுவதாக ஐதீகம். அந்த கும்பத்தைப் பார்க்கவும், அம்மனின் சிரித்த முகத்தை பார்க்கவும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
கும்ப பூஜை முடிந்தவுடன் கும்பப் பிரசாதத்தை அவர்கள் வாங்கிச் சாப்பிட்டனர். அந்த பிரசாதத்தை சாப்பிட்டால் நோய்கள் குணமாகும், குழந்தை பாக்கியம் கிட்டும், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பின்னர், தேர், கோயில் நிலைக்குச் சென்றது.
திருக்கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், பெரியநத்தம் கிராமத்தார், விழாக்குழுவினர், இளைஞர்கள், பக்தர்கள், ஆன்மிக அமைப்பினர் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com